தமிழகம்

1.முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உள்ள இ.மதுசூதனன் தலைமையிலான அணிக்கே அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கீடு செய்து தலைமைத் தேர்தல் ஆணையம்  அதிகாரபூர்வமாக அறிவித்தது.

2.ஒடிசா உயர் நீதிமன்றத்திலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நீதிபதி சத்ருகனா புஜாரி  பதவியேற்றுக்கொண்டார்.


இந்தியா

1.உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கு ஊதிய உயர்வு அளிக்கும் பரிந்துரைக்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ரூ.2.80 லட்சம், உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு ரூ.2.50 லட்சம் மாத ஊதியம் கிடைக்கும்.


உலகம்

1.துணை அதிபர் பதவியிருந்து நீக்கப்பட்ட எம்மர்சன்  ஜிம்பாப்வேவின் புதிய அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

 


வர்த்தகம்

1.நலி­வ­டைந்த மற்­றும் திவால் நிறு­வ­னங்­கள் சட்­டத்­தி­ருத்­தம் தொடர்­பான, அவ­சர சட்­டத்­திற்கு, ஜனா­தி­பதி, ராம்­நாத் கோவிந்த், நேற்று ஒப்­பு­தல் அளித்­தார்.

2. தென் கொரி­யா­வைச் சேர்ந்த, லோட்டே மற்­றும் பிரான்­சை சேர்ந்த, பியூ­ஜி­யாட் குழு­மங்­கள், இந்தி­யா­வில், 40 ஆயி­ரம் கோடி ரூபாய் முத­லீடு செய்ய திட்­ட­மிட்டு உள்ளன.


விளையாட்டு

1.ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினார். எனினும், மற்றொரு இந்திய வீராங்கனையான சாய்னா நெவால், தனது 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.


இன்றைய தினம்

1.1969 – சந்திரனுக்குச் சென்ற அப்பல்லோ 12 விண்கலம் 3 விண்வெளி வீரர்களுடன் பசிபிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.
2.1639 – ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை கண்டுபிடித்தார்

 

–தென்னகம்.காம் செய்தி குழு