தமிழகம்

1.மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக கூட்டணி சாதனை படைத்துள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய அளவிலான வெற்றியை அந்தக் கூட்டணி பெற்றுள்ளது. அதேசமயம், தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

2.தமிழகத்தில் 22 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் 9 தொகுதிகள்  வெற்றி பெற்றதின் மூலம் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது அதிமுக.


இந்தியா

1.மக்களவைத் தேர்தலில் 345 தொகுதிகளை கைப்பற்றி, மத்தியில் ஆட்சியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தக்க வைத்து கொண்டுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து 2ஆவது முறையாக விரைவில் பதவியேற்கிறார்.

2.அருணாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.ஒடிஸா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சி மீண்டும் ஆட்சியமைக்கிறது. அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் 5ஆவது முறையாக முதல்வராக பதவியேற்கிறார்.

3.ஆந்திரா மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி பெற்ற  வெற்றியை அடுத்து வருகிற 30-ம் தேதி ஆந்திர முதல்வராகப் பதவியேற்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி.

4.சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்.) கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

5.உச்சநீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட 4 புதிய நீதிபதிகள் வெள்ளிக்கிழமை பதவியேற்க உள்ளனர்.
உச்சநீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனிருத்தா போஸ், குவாஹாட்டி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ். போபண்ணா, மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய், ஹிமாசலப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் ஆகியோரின் பெயர்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலீஜியம் அமைப்பு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது.


வர்த்தகம்

1.இந்தியாவில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் கணினி விற்பனை சந்தையில் 8.3 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது.

2.பரஸ்பர நிதி துறை வர்த்தகத்திலிருந்து வெளியேறுவதாக ரிலையன்ஸ் கேப்பிட்டல் (ஆர்கேப்) தெரிவித்துள்ளது.


உலகம்

1.பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெறுவதாக இருந்த புதிய பிரெக்ஸிட் ஒப்பந்த மசோதா மீதான வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.இந்தியா ஓபன் குத்துச்சண்டை போட்டியில் மகளிர் பிரிவில், சக நாட்டு வீராங்கனை நிகத் ஜரீனை 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் 6 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரி கோம்.


ன்றைய தினம்

  • எரித்திரியா விடுதலை தினம்(1993)
  • விக்கிமேப்பியா ஆரம்பிக்கப்பட்டது(2006)
  • நியூயார்க்கில் புரூக்ளின் பாலம் திறந்து விடப்பட்டது(1883)
  • முதலாவது மின்னியல் தந்திச் செய்து வாஷிங்டன் டிசியில் இருந்து மேரிலாந்திற்கு அனுப்பப்பட்டது(1844)

– தென்னகம்.காம் செய்தி குழு