Current Affairs – 24 May 2018
தமிழகம்
1.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் தேர்ச்சி வீதம் 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
2. காஞ்சிபுரத்தில் வினாத்தாள் குழப்பத்தைத் தொடர்ந்து, 16 பேருக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை மறுதேர்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
3.தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மூன்று மாவட்டங்களில் வரும் 27 -ஆம் தேதி வரை இணைய சேவைகளை ரத்து செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியா
1.திவால் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான அவசரச் சட்டம் இயற்றுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2.சர்வதேச அளவில் தரமான மருத்துவ வசதி கிடைக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 145 ஆவது இடமே கிடைத்துள்ளது. மொத்தம் 195 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
வர்த்தகம்
1.மாநிலத்துக்குள், ‘இ – வே பில்’ நடைமுறைக்கு வந்த பின், சரக்குகளை கொண்டு செல்ல, ‘பில்’ இல்லையெனில், வரியுடன், 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என, வணிக வரி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
2.மொரீஷியசைச் சேர்ந்த, ஆப்ரேஷியா வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: இந்தியாவில் தற்போது, 119 பெருங்கோடீஸ்வரர்கள் உள்ளனர். அடுத்த, 10 ஆண்டுகளில், இந்தியாவில் கூடுதலாக, 238 பெருங்கோடீஸ்வரர்கள் உருவாவர். இது, சீனாவில், 448 ஆக இருக்கும்.
உலகம்
1.வறட்சி, பனிமலைகள் உருகுவது, கடலில் நீரின் அளவு அதிகரித்து வருவது ஆகியவற்றை கண்காணிப்பதற்காக 2 பிரத்யேக செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக நாஸா அமைப்பு விண்ணுக்கு செலுத்தியது
2.ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் வரும் 31-ஆம் தேதி முதல் டீசல் வாகனங்களுக்கு தடை விதிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
விளையாட்டு
1.தாய்லாந்தில் நடைபெறும் உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்திய மகளிரணி ஜப்பானிடம் 0-5 என்ற கணக்கில் தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது.
2.தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏ பி டி வில்லியர்ஸ், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இன்றைய தினம்
- எரித்திரியா விடுதலை தினம்(1993)
- விக்கிமேப்பியா ஆரம்பிக்கப்பட்டது(2006)
- நியூயார்க்கில் புரூக்ளின் பாலம் திறந்து விடப்பட்டது(1883)
- முதலாவது மின்னியல் தந்திச் செய்து வாஷிங்டன் டிசியில் இருந்து மேரிலாந்திற்கு அனுப்பப்பட்டது(1844)
–தென்னகம்.காம் செய்தி குழு