தமிழகம்

1.மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான முதல்கட்ட பயிற்சி தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்கான தகவல்கள் சம்பந்தப்பட்ட ஊழியர்களின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


இந்தியா

1.பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவராக மத்திய அமைச்சர் உமா பாரதி சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

2.இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக, துணை அட்மிரல் கரம்வீர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

3.2025ஆம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்கும் வகையில் நாடு முழுவதும் பொது விழிப்புணர்வு முகாம்களை நடத்த இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) திட்டமிட்டுள்ளது.


வர்த்தகம்

1.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மார்ச் 15-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 40,560 கோடி டாலராக (ரூ.28.39 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.


உலகம்

1.வட கொரியா மீது அமெரிக்க நிதியமைச்சகம் அறிவித்த கூடுதல் பொருளாதாரத் தடைகளை அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனடியாக வாபஸ் பெற உத்தரவிட்டார்.

2.கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவாக ரஷியா தலையீடு செய்ததாகக் கூறப்படுவது குறித்த விசாரணை அறிக்கையை, சிறப்பு விசாரணை அதிகாரி ராபர்ட் முல்லர் நீதித் துறையிடம் சமர்ப்பித்துள்ளார்.


விளையாட்டு

1.மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்கள் ஜோகோவிச், நவோமி ஒஸாகா ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

2.யூரோ கோப்பை கால்பந்து 2020 தகுதிச் சுற்று ஆட்டங்களில் இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை வெற்றி பெற்றுள்ளன.


ன்றைய தினம்

  • உலக வானிலை தினம்
  • தமிழக அறிவியலாளர் ஜி.டி.நாயுடு பிறந்த தினம்(1893)
  • இந்திய சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் இறந்த தினம்(1931)
  • கலிபோர்னியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது(1868)

– தென்னகம்.காம் செய்தி குழு