இந்தியா

1.சட்ட மேதை பாபா சாகேப் அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14-ம் தேதி சமூக நீதி தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2.கர்நாடகத்தில் லிங்காய்த் சமூகத்தினருக்கு மைனாரிட்டி அந்தஸ்து வழங்கி மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


உலகம்

1.பெரு நாட்டின் புதிய அதிபராக மார்டின் விஸ்காரா பொறுப்பேற்றுள்ளர்.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய உண்மை மற்றும் பாதிக்கப்பட்டோர் கண்ணியம் சார்ந்த தினம்(International Day for the Right to the Truth Concerning Gross Human Rights Violations and for the Dignity Victims).
பேராயர் ஆஸ்கார் அருனள்போ ரோமியோ அவர்கள் எல்சல்வடோரில் மனித உரிமை மீறல் மற்றும் வன்முறையை எதிர்த்து 1980ஆம் ஆண்டு மார்ச் 24 இல் போராடினார். இதனை கருத்தில்கொண்டு மனித உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களையும், வன்முறையால் உயிரிழந்தவர்களை நினைவு கூற இத்தினத்தை ஐ.நா. சபை 2010ஆம் ஆண்டில் அறிவித்தது.
2.இன்று உலக காசநோய் தினம்(World Tuberculosis Day).
காசநோய் ஒரு தொற்றுநோய் என்பதை ராபர்டு கோச் (Robert Koch) என்பவர் 1882ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று கண்டுபிடித்தார். இது ஒரு உயிர்க்கொல்லி நோய். ஆரம்பத்திலேயே இந்நோயை கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்திவிடலாம். காசநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த 1992ஆம் ஆண்டுமுதல் உலக காசநோய் தினம் உலக சுகாதார அமைப்பால் கடைப்பிடிக்கப்படுகிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு