தமிழகம்

1.தமிழகத்தில் முதன்முறையாக சர்வதேச தரத்தில் ரூ.20 கோடி செலவில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு தனி விளையாட்டு மைதானம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


இந்தியா

1.முப்பது ஆண்டுகள் பணி முடித்த அல்லது 55 வயது நிறைவு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு பணித் தகுதியை ஆய்வு செய்து கட்டாய ஓய்வு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

2.தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) கூடுதல் அதிகாரங்களை அளிக்கும் வகையில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


வர்த்தகம்

1.சிறிய கடை­கள், உண­வ­கங்­கள் போன்­றவை, ‘வைபை’ இணைப்பு சேவைக்­கான, சில்­லரை விற்­ப­னை­யில்
ஈடு­ப­டு­வதை அனு­ம­திப்­பது குறித்து, மத்­திய அரசு  ஆலோ­சித்து வரு­கிறது.


உலகம்

1.ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.


விளையாட்டு

1.எப்ஐஎச் மகளிர் ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தகுதிச் சுற்றுக்கு தேர்வு பெறும் வகையில் ஹிரோஷிமா நகரில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதிச் சுற்றுக்கு ஆசிய சாம்பியன் ஜப்பான், இந்தியா தகுதி பெற்றன.

2.கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு பிரேசில், சிலி அணிகள் தகுதி பெற்றுள்ளன.


ன்றைய தினம்

  • மணிலா நகரம் அமைக்கப்பட்டது(1571)
  • நியூஜெர்சியில் குடியேற்றம் ஆரம்பமானது(1664)
  • தமிழறிஞர் கா.அப்பாத்துரை பிறந்த தினம்(1907)
  • கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்(1921)
  • மணிக்கொடி எழுத்தாளர் சிட்டி பெ.கோ.சுந்தரராஜன் இறந்த தினம்(2006)

– தென்னகம்.காம் செய்தி குழு