Current Affairs – 24 June 2018
தமிழகம்
1.இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 2017-18 ஆம் ஆண்டுக்கான கையேட்டில் நிதிப் பற்றாக்குறை உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
2.பத்து நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டப் பேரவை வரும் திங்கள்கிழமை மீண்டும் தொடங்குகிறது.
இந்தியா
1.மூன்று லட்சம் மக்கள்தொகை உள்ள நகரங்களில் இந்த ஆண்டிற்கான திடக்கழிவு மேலாண்மையை மேற்கொள்வதில் திருப்பதி நகரம் தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
வர்த்தகம்
1. கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் மிகவும் பரபரப்பு மிகுந்த 10 சர்வதேச வான்வழித் தட பட்டியலில் துபை-மும்பை முதலிடத்தைப் பிடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2.இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு சென்ற ஜூன் 15-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 304 கோடி டாலர் சரிந்தது.
உலகம்
1.சவூதி அரேபியாவில் பெண் ஓட்டுநர்கள் மீதான நீண்டகால தடை நிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
1. நெதர்லாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
2.மங்கோலியாவில் நடைபெறும் உலான்பாதர் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சோனியா லேதர், மன்தீப் ஜங்ரா உள்ளிட்ட 5 பேர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.
3.உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் “இ’ பிரிவு ஆட்டம் ஒன்றில் ஸ்விட்சர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது.மெக்ஸிகோ 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது.பெல்ஜியம் 5-2 என்ற கோல் கணக்கில் டுனீசியாவை வெற்றி கண்டது.
இன்றைய தினம்
- மணிலா நகரம் அமைக்கப்பட்டது(1571)
- நியூஜெர்சியில் குடியேற்றம் ஆரம்பமானது(1664)
- தமிழறிஞர் கா.அப்பாத்துரை பிறந்த தினம்(1907)
- கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்(1921)
- மணிக்கொடி எழுத்தாளர் சிட்டி பெ.கோ.சுந்தரராஜன் இறந்த தினம்(2006)
–தென்னகம்.காம் செய்தி குழு