தமிழகம்

1.நிகழ் நிதியாண்டில் தமிழகத்தில் ரூ.92,500 கோடி வருமான வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான வருமான வரித் துறை ஆணையர் (நிர்வாகம்) ரங்கராஜ் தெரிவித்தார்.


இந்தியா

1.கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு மீது செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 99 எம்எல்ஏக்களும், எதிராக 105 எம்எல்ஏக்களும் வாக்களித்தனர். இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து, முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

2.கடந்த 1954-ஆம் ஆண்டு முதல் இதுவரை 272 வெளிநாட்டவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்தது.

3.சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவது, நவீன தொழில்நுட்ப பயன்பாடு உள்ளிட்ட கூடுதல் அம்சங்களைக் கொண்ட மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.


வர்த்தகம்

1.இந்திய பங்குச் சந்தைகளில் பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான முதலீடு சென்ற ஜூன் மாதத்தில் ரூ.81,913 கோடியாக குறைந்துள்ளது.
சென்ற பிப்ரவரி மாதத்தில் ரூ.73,428 கோடியாக இருந்த இவ்வகை முதலீடு மார்ச் மாதத்தில் ரூ.78,110 கோடியாகவும், ஏப்ரலில் ரூ.81,220 கோடியாகவும், மே இறுதியில் ரூ.82,619 கோடியாகவும் அதிகரித்தது.

2.சர்வதேச அளவிலான பார்ச்சூன் 500 நிறுவனங்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 42 இடங்கள் முன்னேறி 106-ஆவது இடத்தை பிடித்து முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது.


உலகம்

1.பிரிட்டனின் கன்சர்வேடிவ் தலைமைக்கு நடைபெற்ற போட்டியில் முன்னாள் உள்துறை அமைச்சர் போரிஸ் ஜான்ஸன் வெற்றி பெற்றதையடுத்து, நாட்டின் அடுத்த பிரதமராக அவர் பொறுப்பேற்கவிருக்கிறார்.

2.சீன முன்னாள் பிரதமர் லீ பெங், தனது 90-ஆவது வயதில் மரணமடைந்தார்.
சீனாவின் 4-ஆவது பிரதமரான லீ பெங், அந்தப் பொறுப்பை 1987-ஆம் ஆண்டு முதல், 1998-ஆம் ஆண்டு வரை வகித்து வந்தார்.


விளையாட்டு

1.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் தனது முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார் இந்திய கேப்டன் விராட் கோலி.
ஏற்கெனவே ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையிலும் கோலி நம்பர் ஒன் வீரராக திகழ்ந்து வருகிறார்.

2.தாய்லாந்து சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார் இந்தியாவின் பாக்யபதி கச்சாரி.


ன்றைய தினம்

  • இந்திய அரசு தனது புதிய பொருளாதார கொள்கையை அறிவித்தது(1991)
  • பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு பாரீசில் அமைக்கப்பட்டது(1924)
  • சோவியத் யூனியனில் உலகின் முதலாவது குழந்தைகளுக்கான ரயில்வே திறக்கப்பட்டது(1935)
  • பெருவில் தொலைந்த நகரமாக கருதப்பட்ட மச்சு பிச்சு என்ற 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையை அமெரிக்க பயணி ஹிராம் பிங்கம் கண்டுபிடித்தார்(1911)

– தென்னகம்.காம் செய்தி குழு