தமிழகம்

1.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப் படிப்புகளை அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் மூலம் பெற்றிருக்க வேண்டும். இப்படிப்புகளை தொலைதூரக் கல்வி வழியாகவோ அல்லது தனியாகவோ எழுதி தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவை வழக்குரைஞர்களாகப் பதிவு செய்ய தகுதியான படிப்புதான் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2.வணிகக் கட்டடங்கள் மற்றும் குடியிருப்புக் கட்டடங்களுக்கு நடப்பு அரையாண்டுக் காலத்திலேயே சொத்து வரியை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


இந்தியா

1.பிஎஸ்-6 (பாரத் ஸ்டேஜ்) எனப்படும் மாசுக் கட்டுப்பாட்டு தர நிர்ணயத்துக்கான புதிய கொள்கைகளின்படி தயாரிக்கப்படாத வாகனங்களை 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.


வர்த்தகம்

1. மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் உள்நாட்டில் 2 கோடி கார்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது. இது வேறு எந்த நிறுவனமும் செய்யாத சாதனை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகம்

1.ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, முதல்கட்டமாக ருவாண்டாவுக்கு திங்கள்கிழமை சென்றார்.

2.சந்தைப் பொருளாதாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் புதிய அரசியல் சாசனத்துக்கு கியூபா நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.


விளையாட்டு

1.அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (ஏஐஎப்எப்) சிறந்த கால்பந்து வீரர், வீராங்கனைக்கான விருதுகளை சுனில் சேத்ரி, கமலா தேவி ஆகியோர் பெற்றனர்.
பிரபல வீரர் பாய்ச்சுங் பூட்டியாவுக்கு பின்னர் இந்திய அணிக்காக 100 சர்வதேச ஆட்டங்களில் விளையாடியவர் என்ற சிறப்பை சுனில் சேத்ரி பெற்றுள்ளார்.

2.அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (ஏஐஎப்எப்) சிறந்த கால்பந்து வீரர், வீராங்கனைக்கான விருதுகளை சுனில் சேத்ரி, கமலா தேவி ஆகியோர் பெற்றனர்.
பிரபல வீரர் பாய்ச்சுங் பூட்டியாவுக்கு பின்னர் இந்திய அணிக்காக 100 சர்வதேச ஆட்டங்களில் விளையாடியவர் என்ற சிறப்பை சுனில் சேத்ரி பெற்றுள்ளார்.


ன்றைய தினம்

  • இந்திய அரசு தனது புதிய பொருளாதார கொள்கையை அறிவித்தது(1991)
  • பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு பாரீசில் அமைக்கப்பட்டது(1924)
  • சோவியத் யூனியனில் உலகின் முதலாவது குழந்தைகளுக்கான ரயில்வே திறக்கப்பட்டது(1935)
  • பெருவில் தொலைந்த நகரமாக கருதப்பட்ட மச்சு பிச்சு என்ற 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையை அமெரிக்க பயணி ஹிராம் பிங்கம் கண்டுபிடித்தார்(1911)

–தென்னகம்.காம் செய்தி குழு