தமிழகம்

1.தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் அமைக்கப்பட்டுள்ள காணொலிக் காட்சி வசதிகளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீ புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

2.சென்னையில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தினமும் விமான சேவை தொடங்கப்படும் என்று இந்தியாவுக்கான ஜப்பான் நாட்டுத் தூதர் கென்ஜி ஹிரமட்சு தெரிவித்தார்.


இந்தியா

1.மத்திய இடைக்கால நிதியமைச்சராக, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையின்பேரில், இவரது நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளார்.

2.2022-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள 22,000 வேளாண் பொருள் சந்தைகளை மின்னணு முறையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்துள்ளார்.


வர்த்தகம்

1.நாட்டின் இறால் ஏற்றுமதி, 10 மாதங்களில், 20.63 சதவீதம் உயர்ந்து, 394 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, இந்திய ரூபாய் மதிப்பில், 27 ஆயிரம் கோடியாகும்.

2.ஜி.எஸ்.டி., தொடர்பான புகார்களை விசாரிக்க, அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட உள்ளது.


உலகம்

1.அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இரு மசோதாக்கள் அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் செனட் சபையில் தாக்கல் செய்யப்படவுள்ளனர்.

2.ஆப்கனில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து கத்தாரில் தலிபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.


விளையாட்டு

1.இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

2.ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.


ன்றைய தினம்

  • தெற்காசியாவின் முதலாவது முழுமையான பல்கலைக்கழகமான கல்கத்தா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது(1857)
  • பேடன் பவல், சாரணியர் இயக்கத்தை ஆரம்பித்தார்(1908)
  • ரஷ்யாவின் பெட்ரோகிராட் நகரம், லெனின் கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது(1924)
  • முதலாவது ஆப்பிள் மார்க்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது(1984)
  • இந்திய அணு ஆராய்ச்சி நிபுணர் ஹோமி பாபா இறந்த தினம்(1966)

– தென்னகம்.காம் செய்தி குழு