இந்தியா

1.இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் இன்று பதவி ஏற்றார்.இவர் இந்தியாவின் 22வது ஆணையராக செயல்படுவார்.
2.குஜராத் முன்னாள் முதல்வரான ஆனந்திபென் படேல் மத்திய பிரதேச கவர்னராக நேற்று பதவியேற்றுக்கொண்டார்.


உலகம்

1.சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் 48-வது உலக பொருளாதார மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாடு 26-ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று சுவிட்சர்லாந்து சென்றைடைந்தார்.


விளையாட்டு

1.உலகின் மிகவும் பணக்கார கால்பந்து கிளப்பாக மான்செஸ்டர் யுனைடெட் 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.ரியல் மாட்ரிட் 2-வது இடத்தையும், பார்சிலோனா 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.
2.நியூசிலாந்தில் நடைபெற்று வரும் U19 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியா வீரர் போப் 8 விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக இந்த சாதனையை நிகழ்த்தினார்.இதன்மூலம் U19 உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற பெயரை போப் பெற்றுள்ளார்.U19 கிரிக்கெட்டில் இந்திய வீரர் இர்பான் பதான் 9 விக்கெட்டுக்கள வீழ்த்தியதே உலக சாதனையைாக இருந்து வருகிறது.


இன்றைய தினம்

1.1984 – முதலாவது ஆப்பிள் மாக்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு