தமிழகம்

1.போட்டித் தேர்வுக்கு வழிகாட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தனி இணையதளத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி  தொடக்கி வைத்தார்.செய்து வைத்தார்.


இந்தியா

1.தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி மார்ச் 1 ஆம் தேதி முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.

2.ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் 14 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு எல்லை பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


வர்த்தகம்

1.இனிமேல் நிறுவனங்கள் தங்களது பதிவு அலுவலகங்களின் புகைப்படங்கள், அதன் புவியியல் அமைப்பு விபரங்கள் உள்ளிட்டவற்றையும் வழங்க வேண்டும் என, மத்திய அரசு புதிய உத்தரவை வழங்க இருக்கிறது.

2.ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து தரவும், வரி ஏய்ப்பைத் தடுக்கவும் 3 புதிய அமைப்புகளை மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரி வாரியம் (சிபிஐசி) உருவாக்கியுள்ளது.


உலகம்

1.மெக்ஸிகோ எல்லைச் சுவர் எழுப்ப நிதி பெறும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள அவசர நிலையை ரத்து செய்வதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஜனநாயகக் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

2.ஐ.நா. சபைக்கான புதிய அமெரிக்க தூதராக கெல்லி நைட் கிராஃப்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தற்போது கனடாவுக்கான தூதராக உள்ளார்.


விளையாட்டு

1.ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார்.
252.9 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனையையும் படைத்தார்.
இதற்கு முன்பு சீனாவின் ஷாவ் ரௌஜு 252.4 புள்ளிகள் பெற்றிருந்ததே உலக சாதனையாக இருந்தது.

2.தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.

தென்னாப்பிரிக்கா மண்ணில் இதற்கு முன்பு எந்தவொரு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணியும் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியதில்லை.


ன்றைய தினம்

  • மெக்சிகோ கொடி நாள்
  • தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்த தினம்(1948)
  • நாசிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது(1920)
  • எஸ்தோனியா விடுதலையை அறிவித்தது(1918)
  • கிரிகொரியன் நாட்காட்டி அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது(1582)

– தென்னகம்.காம் செய்தி குழு