இந்தியா

1.ஒடிசா மாநிலம் அருகே வங்க கடல் பகுதியில் உள்ள பரதிப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் இருந்து அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் தனுஷ் ஏவுகணை நேற்று காலை 10:52 மணிக்கு சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை 350 கி.மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கவல்லது.


உலகம்

1.பெண் உதவியாளருடன் நெருக்கமாக பழகி அவரை கர்ப்பிணியாக்கிய குற்றச்சாட்டுக்கு இலக்காகி இருக்கும் ஆஸ்திரேலிய துணை பிரதமர் பர்னபி ஜாய்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்கிறார்.
2.துபாயில் இருந்து அபுதாபிக்கு வெறும் 12 நிமிடங்களில் செல்லும் வகையிலான அதிவேக ஹைபர்லூப் போக்குவரத்துக்கான ஹைபர்லூப் பெட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மணிக்கு 560 கி.மீ. முதல் 1200 கி.மீட்டர் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய வகையில் இந்த பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.கொரியாவிற்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடரில் விளையாட இருக்கும் இந்திய கேப்டனாக ராணி ராம்பால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


இன்றைய தினம்

1.1969 – மரைனர் 6 விண்கலம் செவ்வாய் கோளுக்கு ஏவப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு