தமிழகம்

1.பெண்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்திய 181 இலவச தொலைபேசி சேவை கடந்த 10-ம் தேதி தமிழகத்துக்கு விரிவுபடுத்தப்பட்டது. சென்னை அம்பத்தூரில் உள்ள அம்மா கால் சென்டர் மையத்தின் ஒரு பகுதியில் 181 இலவச தொலைபேசி எண்ணுக்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது.

2.சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஜப்பான் நிதி நிறுவனமான ஜெய்கா, முதல்கட்டமாக ரூ.4,770 கோடி கடனுதவி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் புதுடெல்லியில் கையெழுத்தானது.


இந்தியா

1.ஜார்கண்ட் மாநிலம் கோலேபிரா தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்  வெற்றி பெற்றார்.

2.கர்நாடகாவில் 2-வது முறை யாக அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.


வர்த்தகம்

1.அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைப்பது தொடர்பாக அந்நிறுவனத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.


உலகம்

1.இந்தோனேஷியாவில் எரிமலை சீற்றத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அலை தாக்கி 222 பேர் உயிரிழந்தனர்.

2.யேமனின் ஹுதைதா நகரில் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதை மேற்பார்வையிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஐ.நா. பார்வையாளர் குழுவின் தலைவர் பேட்ரிக் காமேயெர்ட் அந்த நாட்டுத் தலைநகர் சனாவை ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தார்.


விளையாட்டு

1.பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் 7 வயது சிறுவன் ஆர்ச்சி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை வழிநடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கௌரவப்படுத்தியுள்ளது.


ன்றைய தினம்

  • லிபியா விடுதலை தினம்(1951)
  • திராவிட கழகத்தை தோற்றுவித்த ஈ.வெ.ராமசாமி இறந்த தினம்(1973)
  • லாவோஸ் விடுதலை பெற்றது(1954)
  • அல்பேனியா குடியரசானது(1924)

– தென்னகம்.காம் செய்தி குழு