இந்தியா

1.கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு ஒடிசா மாநிலம் பூரி நகரின் கடற்கரையில் பிரமாண்டமான ‘சான்ட்டா கிளாஸ்’ (கிறிஸ்துமஸ் தாத்தா) மணல் ஓவியம் வரைந்து சுதர்சன் பட்நாயக் சாதனை படைத்துள்ளார்.
2.இமாச்சலப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதை தொடர்ந்து அம்மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக ஜெய்ராம் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவர் இமாச்சலப்பிரதேசத்தின் 13-வது முதல் மந்திரியாக விரைவில் பதவியேற்கவுள்ளார்.
3.சமூக வலைதளங்கள் மூலம் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் புதிய முறையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன.
4.டெல்லியில் தனியார் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் 5,300 குழந்தைகள் மிக பெரிய மனித நுரையீரல் போல் வடிவமைத்து கின்னஸ் சாதனை செய்துள்ளனர்.


இன்றைய தினம்

1.1969 – வடகடலின் நார்வே பகுதியில் முதன் முதலாக எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு