Current Affairs – 24 August 2018
தமிழகம்
1.சென்னை, திருவள்ளூர், கடலூர், மதுரை உள்பட எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா
1.ஜம்மு-காஷ்மீர் மற்றும் பிகார் மாநிலத்தின் புதிய ஆளுநர்களாக முறையே சத்ய பால் மாலிக் மற்றும் லால்ஜி டாண்டன் ஆகியோர் பதவியேற்றனர்.
2.அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வில் இருந்து வந்த அருண் ஜேட்லி, தற்போது பூரண குணமடைந்து வரும் நிலையில், அவருக்கு மத்திய நிதியமைச்சர் பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.
வர்த்தகம்
1.அசோசெம் எனும், இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் புதிய பொதுச் செயலராக, உதய் குமார் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
2.நடப்பாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.5 சதவீத வளர்ச்சி காணும் என சர்வதேச தரக் குறியீட்டு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.
உலகம்
1.ரஷ்யாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டு ராணுவப் பயிற்சியில் இந்தியா, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
விளையாட்டு
1.பாட்மிண்டன் நாக் அவுட் சுற்று மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து 21-10, 12-21, 23-21 என்ற ஆட்டக் கணக்கில் வியத்நாமின் டிராங் தை வியை வென்று காலிறுதிக்கு முன்னேறினார் சிந்து.மற்றொரு ஆட்டத்தில் சாய்னா நெவால் 21-7, 21-9 என்ற ஆட்டக்கணக்கில் ஈரானின் சொரயாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு செளரவ் கோஷல், ஹரிந்தர் பால் சிங் , தீபிகா பல்லிக்கல், ஜோஷ்னா தகுதி பெற்றுள்ளனர்.
துப்பாக்கி சுடுதல் ஆடவர் டபுள் டிராப் பிரிவில் இந்தியாவின் 15 வயதே ஆன இளம் வீரர் ஷர்துல் விஹான் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.
டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா தோல்வியடைந்து வெண்கலப்பதக்கம் வென்றார்.
நீச்சல் ஆடவர் 200 மீ பேக்ஸ்ட்ரோக் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஹரிநடராஜ் புதிய தேசிய சாதனையுடன் இறுதிக்கு முன்னேறினார்.
இன்றைய தினம்
- உக்ரேன் விடுதலை தினம்(1991)
- கல்கத்தா நகரம் அமைக்கப்பட்டது(1690)
- நேட்டோ ஒப்பந்தம் அமலுக்கு வந்தது(1949)
- ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் பிரதேசம் உருவாக்கப்பட்டது(1936)
- நாமக்கல் கவிஞர் வே.ராமலிங்கம் பிள்ளை இறந்த தினம்(1972)
- தென்னகம்.காம் செய்தி குழு