தமிழகம்

1.நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையான சென்னை கடற்கரை, அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக மீண்டும் சென்னை கடற்கரையை அடையும் பாதையில் எதிரெதிர் திசைகளில் இரு சர்க்குலர் ரயில் சேவைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.


இந்தியா

1.மக்களவைக்கு 3ஆம் கட்டமாக 117 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் 65.61 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதிகப்பட்சமாக அஸ்ஸாமில் 80.73 சதவீத வாக்குகள் பதிவாகின. ஒடிஸாவில் 60.44 சதவீதம், மேற்குவங்கத்தில் 79.67 சதவீதம், பிகாரில் 59.97 சதவீதம், திரிபுராவில் 79.57 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.


வர்த்தகம்

1.பொதுத் துறையைச் சேர்ந்த அலாகாபாத் வங்கிக்கு மத்திய அரசு ரூ.5,000 கோடியை அங்கீகரிக்கப்பட்ட கூடுதல் மூலதனமாக வழங்கியுள்ளது.


உலகம்

1.ஜப்பானில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் எடோகாவா வார்டில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புராணிக் யோகேந்திரா வெற்றி பெற்றார். ஜப்பானில் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் இவர்தான்.


விளையாட்டு

1.டோஹாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகளப் போட்டியில் 800 மீ., ஓட்டத்தில் (2 நிமிடம், 2.70 விநாடிகள்),திருச்சி அருகேயுள்ள முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி, தங்கம் வென்றுள்ளார்.

2.ஹாங்காங்கில்  நடைபெற்ற ஆசிய பவர்லிப்டிங் சாம்பியன் போட்டி மகளிர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த  ஆர்த்தி அருண் தங்கப் பதக்கம் வென்றார்.

3.ஆசிய மல்யுத்த சாம்பியன் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்றார் நட்சத்திர வீரர் பஜ்ரங் புனியா.

4.ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய நட்சத்திரங்கள் ஷிவ தாபா, சரிதாதேவி, ஆஷிஷ் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.


ன்றைய தினம்

  • சர்வதேச புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
  • ஆங்கில நாடக எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர் இறந்த தினம்(1616)
  • உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் சத்யஜித் ரே இறந்த தினம்(1992)
  • எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது(1984)
  • புனித ஜார்ஜ் கோட்டை மதராசில்(சென்னை) கட்டப்பட்டது(1639)

– தென்னகம்.காம் செய்தி குழு