Current Affairs – 24 April 2018
உலகம்
1.அதிபரின் அதிகாரத்தை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த அர்மேனியா பிரதமர் செர்ஸ் சர்கிசியான் மக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்து நேற்று ராஜினாமா செய்தார்.
2.புதுமண ஜோடிகளை விட திருமணமாகி 20 ஆண்டுக்கு பிறகு தான் தம்பதிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.இந்த ஆய்வு அமெரிக்காவில் எடுக்கப்பட்டு உள்ளது. பென்சில்வேனியா ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிரிகாம் இளைஞர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
விளையாட்டு
1.இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்கும் வகையில், சிறப்பு தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது.
2.இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் இந்த வருடத்திற்கான சிறந்த வீரர் விருதை லிவர்பூல் முகமது சாலா தட்டிச் சென்றுள்ளார்.
இன்றைய தினம்
1.இன்று உலக ஆய்வக விலங்குகள் தினம்(World Day for Laboratory Animals).
உலகளவில் ஆய்வுக்கூடங்களில் விலங்குகளை ஆய்விற்காகப் பயன்படுத்துகின்றனர். விலங்குகள்மீது உயிரி மருத்துவ ஆராய்ச்சி செய்கின்றனர். இதனால் விலங்குகள் வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றன. ஆய்வக விலங்குகள் சித்திரவதைக்குள்ளாவதை தடுக்க தேசிய எதிர்ப்பு விவிசெக்ஸன் சங்கம் 1979ஆம் ஆண்டில், ஏப்ரல் 24ஐ உலக ஆய்வக விலங்குகள் தினமாக அறிவித்தது.
–தென்னகம்.காம் செய்தி குழு