தமிழகம்

1. திருச்சி உறையூரில், சாலை ரோடு பகுதியில் அமைந்துள்ள தான்தோன்றீஸ்வரர் கோயிலில், 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால கல்வெட்டு ஒன்று வரலாற்றுத்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இந்தியா

1.குஜராத் மாநிலத்தில் மேலும் 2 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

2.இந்தியாவில் 2.5 சதவீத கல்லூரிகளில் மட்டுமே பிஎச்டி ஆய்வுப் படிப்பு உள்ளது என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அகில இந்திய உயர்கல்வி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.உச்சநீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்ரமணியன் உள்பட 4 புதிய நீதிபதிகள் திங்கள்கிழமை (செப்.23) பதவியேற்க உள்ளனர்.


வர்த்தகம்

1.பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) கடன்பத்திர வெளியீட்டு மூலம் ரூ.500 கோடியை திரட்டிக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

2.இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி கடந்த ஜூலை மாதத்தில் சுமார் 4 சதவீதம் குறைந்து, 18.93 மில்லியன் டன் என்ற அளவில் இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிலக்கரி இறக்குமதி 19.67 மில்லியன் டன்னாக இருந்தது.


உலகம்

1.இந்திய – அமெரிக்க எண்ணெய், எரிவாயு உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையே ரூ.2.5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.77 லட்சம் கோடி) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். சந்திப்பின் முடிவில், இரு நாட்டு எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

2.பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியான போரை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.ஐ.நா. பொதுச் சபையின் 74ஆவது ஆண்டுக் கூட்டத்தின் பொது விவாதம் வரும் 24ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், பிரதமர் மோடி உரையாற்றவிருக்கிறார். இதையொட்டி, ஒரு வார கால அரசுமுறை பயணமாக அவர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.


விளையாட்டு

1.உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றார் இந்திய வீரர் ராகுல் அவாரே.
ஆடவர் 61 கிலோ இறுதிச் சுற்றில் இந்திய வீரர் ராகுல் அவாரே 11-4 என்ற புள்ளிக் கணக்கில் பான் அமெரிக்கன் சாம்பியன் டைலர் லீயை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.

2.பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா சாம்பியன் பட்டம் வென்றார்.

3.தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக தற்போதைய தலைவர் என்.சீனிவாசன் மகள் ரூபா குருநாத் பொறுப்பேற்க உள்ளார்.


ன்றைய தினம்

  • சவுதி அரேபியா தேசிய தினம்(1932)
  • மொசிலா பயர் பாக்ஸ், இணைய உலாவி வெளிவந்தது(2002)
  • நெப்டியூன் கோள் கண்டுபிடிக்கப்பட்டது(1846)
  • ஹேர்மன் ஹொலரித், கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார்(1884)
  • நின்டெண்டோ கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது(1889)

– தென்னகம்.காம் செய்தி குழு