Current Affairs – 23 September 2018
தமிழகம்
1.நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்; கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு கடல்வழிப் பாலம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
இந்தியா
1.நாட்டில் 10 கோடி ஏழைக் குடும்பங்கள் மருத்துவ வசதி பெறும் “ஆயுஷ்மான் பாரத்’ – தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொடங்கி வைக்கிறார்.
2.நகரவனம்’ என்ற பெயரிலான மரம் நட்டுப்பராமரிக்கும் திட்டத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திருப்பதியில் தொடங்கி வைத்தார்.நாட்டிலேயே முதல்முறையாக திருப்பதியில் ஒவ்வொரு வீட்டிற்கும் கியூ.ஆர். கோடு திட்டத்தை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கிவைத்தார்.
வர்த்தகம்
1.இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பர் 14-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 120 கோடி டாலர் அதிகரித்து 40,048 கோடி டாலராக இருந்தது.
உலகம்
1.ஹாங்காங்குக்கும், சீனாவுக்கும் இடையிலான அதிவேக ரயில்பாதை சனிக்கிழமை திறக்கப்பட்டது.
2.ஐ.நா. பொதுச் செயலர் அண்டோனியோ குட்டெரெஸ், வரும் அக்டோபர் 1-ஆம் தேதி இந்தியா வருகிறார்.
விளையாட்டு
1.பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு ஜப்பானின் நவோமி ஒஸாகா தகுதி பெற்றுள்ளார்.
இன்றைய தினம்
- சவுதி அரேபியா தேசிய தினம்(1932)
- மொசிலா பயர் பாக்ஸ், இணைய உலாவி வெளிவந்தது(2002)
- நெப்டியூன் கோள் கண்டுபிடிக்கப்பட்டது(1846)
- ஹேர்மன் ஹொலரித், கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார்(1884)
- நின்டெண்டோ கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது(1889)
- தென்னகம்.காம் செய்தி குழு