தமிழகம்

1.கோவை மாவட்டம், சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது குறித்து விசாரிக்க , அரசு முதன்மைச் செயலர் ககன்தீப் சிங் பேடி IAS தலைமையில் விசாரணை குழுவை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.


இந்தியா

1.மும்பை காவல்துறை சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க, பெண் காவலர்கள் மூலம் மாணவர்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை மீண்டும் துவக்கியுள்ளனர்.இதற்கு Police Didi என பெயரிட்டுள்ளனர்.
2.மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் கொல்கத்தாவில் அமைந்துள்ள Dr Anjali Chatterjee Regional Research Institute for Homoeopathy (RRIH)ல் இந்தியாவின் முதல் வைராலாஜி ஆய்வு கூடம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த ஆய்வகத்தில் சிக்கன் குனியா, டெங்கு, ஸ்வைன் புளூ உள்ளிட்ட நோய்களுக்கு ஹோமியோபதியில் புதிய மருந்துகளை கண்டுபிடிப்பதற்கான ஆய்வு நடைபெறும்.
3.இந்தியாவில் உள்ள பத்திரிகைகளின் விற்பனையை தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கும் “ஏ.பி.சி.” என்று அழைக்கப்படும் ஆடிட் பிரோ ஆப் சர்குலேஷனின் தலைவராக தேவாப்ரத முகர்ஜி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.
4.பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாராத இயக்குநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.அவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.


உலகம்

1.அமெரிக்காவில் செயல்படும் மார்கோனி கழகம் வழங்கும் 2017ம் ஆண்டுக்கான Paul Baran Young Scholar விருதை, ஆனந்த தீர்த்த சுரேஷ்க்கு வழங்கியுள்ளது.மேலும் மார்கோனி கழகத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது – தாமஸ் கைலாத்துக்கும்,மார்கோனி பரிசு – அருண் நேத்ரவலிக்கும் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.மேற்கண்ட மூவரும் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் ஆவார்கள்.
2.உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் இந்தியாவில் டெஸ் எனும் பேமெண்ட் செயலியை தொடங்க இருக்கிறது.
3.ஜெர்மனியின் முனிச் நகரில் உலகின் மிகப்பெரிய பீர் திருவிழா Oktoberfest துவங்கியுள்ளது.இந்த திருவிழாவுக்காக இந்த ஆண்டு The Oktoberfest.de என்ற செயலி (ஆப்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அருகில் உள்ள கூடாரங்கள், அதில் இடம் கிடைக்குமா என்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.


விளையாட்டு

1.கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய விராங்கனை சிந்து, ஜப்பானின் நயோமியை வீழ்த்தி பட்டம் வென்றுள்ளார்.உலகத் தரவரிசையில் 4 ஆம் இடத்தில் இருக்கும் இந்தியாவின் பி.வி.சிந்து, இந்த ஆண்டு கைப்பற்றும் 2-வது சூப்பர் சீரிஸ் பட்டமாகும். மேலும் கொரியன் சூப்பர் சீரிஸ் பட்டத்தை கைப்பற்றும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.


இன்றைய தினம்

1.1889 – நின்டெண்டோ கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு