தமிழகம்

1.மத்திய அரசின் பிரதான மந்திரி ஜன் கல்யாண் திட்டத்தின் தமிழ்நாடு பொதுச் செயலாளராக எம்.கே.ஆர். ஜெய கணேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

2.பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கான நேரம் 2 மணி 30 நிமிஷங்கள் என்பதை 3 மணி நேரமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

3.எழுமின் அமைப்பு சார்பில் சென்னையில் உலகத் தமிழ் தொழில்முனைவோர் மாநாடு நவம்பர் 14-இல் தொடங்கி 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


இந்தியா

1.வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உதவும் நோக்கில் ஒற்றைச் சாளர முறையை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

2.வெளியுறவு அமைச்சக கொள்கை ஆலோசகராக, மூத்த பத்திரிகையாளரும், குடியரசுத் தலைவரின் முன்னாள் ஊடகச் செயலருமான அசோக் மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார்.

3.நாட்டில் உள்ள பெண்களின் பெருமையை கொண்டாடும் வகையில் திட்டமிடப்பட்ட பாரத் கி லக்ஷ்மி என்ற பிரசாரத்தின் விளம்பரத் தூதர்களாக பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

4.தமன்னா என்ற பெயரில் மாணவ, மாணவியருக்கு திறனறி தேர்வு ஒன்றை நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டு அறிமுகப்படுத்தியுள்ளது.


வர்த்தகம்

1.உஜ்ஜீவன் சிறு நிதி வங்கியின் புதிய பங்கு வெளியீட்டுக்கு இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) அனுமதியளித்துள்ளது.

2.தனியார் துறையைச் சேர்ந்த ஆக்ஸிஸ் வங்கி இரண்டாம் காலாண்டில் நிகர அளவில் ரூ.112.08 கோடி இழப்பை சந்தித்தது.


உலகம்

1.ஐரோப்பிய யூனியனுடன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மேற்கொண்ட பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு, அந்நாட்டு நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது. எனினும், அந்த ஒப்பந்தத்தை முறைப்படி நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் குறித்த பிரதமரின் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

2.கனடாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி, முதலிடத்தைப் பிடித்துள்ளது.
எனினும், ஆட்சியமைப்பதற்குப் போதுமான பெரும்பான்மை இல்லாததால் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையில் சிறுபான்மை அரசு அமையும் என்று கூறப்படுகிறது.

3.தாய்லாந்து மன்னர் மகா வஜ்ராலங்காரணின் துணைவியாக அறிவிக்கப்பட்ட நிரமோன் ஓனுப்ரோனுக்கு அரசிலும், ராணுவத்திலும் வழங்கப்பட்டிருந்த உயரிய பதவி, பட்டங்களைப் பறித்து மன்னர் உத்தரவிட்டுள்ளார்.

4.ஜப்பான் பேரரசராக நருஹிதோ அரியணை ஏறியதை முறைப்படி அறிவிக்கும் நிகழ்ச்சி அந்த நாட்டின் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது.


விளையாட்டு

1.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்  மும்பையில் நடைபெறுகிறது. இதில் 39-ஆவது தலைவராகிறார் செளரவ் கங்குலி. மேலும் இக்கூட்டத்துடன் கிரிக்கெட் நிர்வாகக் குழு (சிஓஏ)வின் பதவிக்காலமும் நிறைவடைகிறது.


ன்றைய தினம்

  • ஹங்கேரி தேசிய தினம்
  • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட் வெளியிடப்பட்டது(2001)
  • ஐ.நா., சபையின் முதலாவது கூட்டத் தொடர் நியூயார்க்கில் துவங்கியது(1946)
  • முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்டது(1911)
  • லெனின், அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்(1917)

– தென்னகம்.காம் செய்தி குழு