தமிழகம்

1.இரண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது என்பன உள்ளிட்ட நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்ய, அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக மத்திய அரசின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியா

1.நாடு முழுவதும் கடந்த 2015 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில், ரயில் மோதி நேரிட்ட விபத்துகளில் சுமார் 50 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக ரயில்வே புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2.இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை சுமார் 60 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

3.எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது ஒரு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4.நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை கோரி தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை  வெளியிடவுள்ளது.


வர்த்தகம்

1.நாட்டின் நிகர நேரடி வரி வசூல் ரூ.4.89 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

2.கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஐஎல்&எஃப்எஸ் நிறுவனத்தை மீட்டெடுக்கும் வகையில் மறுசீரமைப்பு திட்டத்தை உருவாக்க 3 ஆலோசகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


உலகம்

1.சீனா மற்றும் ஹாங்காங்கை இணைக்கும் உலகின் மிக நீண்ட கடல் பாலமானது இன்று போக்குவரத்திற்கு திறக்கப்படுகிறது.

2.வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான பான்முன்ஜோம் எல்லைப் பகுதியில், இரு தரப்பினரும் குவித்துள்ள படைகளை விலக்கிக் கொள்வது குறித்த பேச்சுவார்த்தை திங்கள்கிழமை மீண்டும் நடைபெற்றது.


விளையாட்டு

1.சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஆசிய போட்டி சாம்பியன் ஜப்பானை 9-0 என்ற கோல் கணக்கில் வென்றது இந்தியா.

2.சச்சின், வார்னர் ஆகியோர் 5 முறை 150 ரன்களுக்கு மேல் அடித்திருந்தனர். ஆனால் ரோஹித் அதை முறியடித்து 6 முறை 150 ரன்களுக்கு மேல் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

3.டென்னிஸ் தரவரிசையில் ஆடவர் பிரிவில் ரபேல் நடாலும், மகளிர் பிரிவில் சிமோனா ஹலேப்பும் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகின்றனர்.


ன்றைய தினம்

  • ஹங்கேரி தேசிய தினம்
  • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட் வெளியிடப்பட்டது(2001)
  • ஐ.நா., சபையின் முதலாவது கூட்டத் தொடர் நியூயார்க்கில் துவங்கியது(1946)
  • முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்டது(1911)
  • லெனின், அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்(1917)
  • தென்னகம்.காம் செய்தி குழு