தமிழகம்

1.சென்னை மற்றும் கர்நாடக மாநிலம் மைசூர் இடையே அதிவேக ரயிலை இயக்குவது தொடர்பான திட்டத்தை, ரயில்வே வாரியத்திடம் ஜெர்மனி அரசு தாக்கல் செய்துள்ளது.அதிவேக ரயில் இயக்குவது தொடர்பான திட்டத்தை தயாரிக்க 3 ஆண்டுகள் பிடிக்கும். அதன்பிறகு அதிவேக ரயில் இயக்குவது தொடர்பான கட்டமைப்பை உருவாக்குவதற்கு 9 ஆண்டுகளாகும். இதன்படி, இந்த திட்டத்தை செயல்படுத்தினால், சென்னை-மைசூர் இடையே 2030ஆம் ஆண்டுக்குள் அதிவேக ரயிலை இயக்க முடியும்.

2.கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணிகளுக்காக ரூ.15,000 கோடி நிவாரண நிதி அளிக்க வேண்டும் என்று தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

3.ரயில் பயணிகள் பாதுகாப்புக்காக ஜி.ஆர்.பி. ஹெல்ப் செயலி (GRP Help App)  அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக ரயில்வே ஏடிஜிபி சி.சைலேந்திரபாபு கூறினார்.


இந்தியா

1.நாடெங்கிலும் 18 மாநிலங்களைச் சேர்ந்த 122 மாவட்டங்களில், வீட்டுப் பயன்பாட்டுக்காக குழாய் மூலமாக சமையல் எரிவாயு கொண்டு செல்வது மற்றும் வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைப்பது ஆகிய திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

2. பிரபல மின்னணு பணப்பரிமாற்ற செயலியான எஸ்டாப் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகியாக பணியாற்றி வரும் அபிஜித் போஸ் என்பவர் வாட்ஸ்-ஆப் நிறுவனத்தின் இந்திய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3.நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி, நிறுவப்பட்ட கொள்திறன் 34 ஆயிரத்தில் இருந்து 72 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரித்துள்ளது என்று மத்திய மின்சாரம், புதிய, புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறையின் இணையமைச்சர் ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார்.


வர்த்தகம்

1.சென்ற அக்டோபர் மாதத்தில் உள்நாட்டு விமானப் பயணம் மேற்கொண்டோரின் எண்ணிக்கை 1.18 கோடியாக அதிகரித்துள்ளது.

2.வேண்டுமென்றே கடன் தொகையை செலுத்தாதவர்களுக்கு எதிராக கண்காணிக்கப்படும் நபர் (லுக்-அவுட்) என சுற்றறிக்கை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுக்க பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுக்கு மத்திய அரசு அதிகாரம் வழங்கியுள்ளது.


உலகம்

1.இந்தியா-ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே முதலீடுகளை அதிகரித்தல், விவசாய ஆராய்ச்சி, கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

2.பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய இருதரப்பு உறவு குறித்து ஐரோப்பிய யூனியனுக்கும், பிரிட்டனுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

3.எமெனில் அரசுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் நடைபெற்று வரும் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, அந்த நாட்டு விவகாரத்துக்கான ஐ.நா. சிறப்புத் தூதர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் போர் நடைபெறும் ஹோடைடா துறைமுக நகருக்கு வருகிறார்.

4.பூமி வெப்பமாதலை அதிகரிக்கக் கூடிய மாசு வாயுக்கள், வளி மண்டலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவில் காணப்படுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.


விளையாட்டு

1.மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் 48 கிலோ எடைப் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு  முன்னேறினார்.

2.மகளிர் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி இந்திய அணியை வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.


ன்றைய தினம்

  • கவிஞர் சுரதா பிறந்த தினம்(1921)
  • அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது(2007)
  • முதலாவது லைஃப் இதழ் வெளியிடப்பட்டது(1936)
  • தென்னகம்.காம் செய்தி குழு