தமிழகம்

1.மின் கம்பம் உட்பட, சேதமடைந்த சாதனங்கள் தொடர்பாக,  செயலி மூலம், மக்களிடம் இருந்து புகார் பெற, மின் வாரியம் முடிவு செய்து உள்ளது.


இந்தியா

1.வருவாய் மற்றும் வரிப் பகிர்வு சார்ந்த பரிந்துரைகளை வழங்குவதற்கான 15-ஆவது நிதிக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

2.கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் அமலில் இருக்கும் வருமான வரிச் சட்டங்களை மறு ஆய்வு செய்து திருத்தியமைப்பதற்காக தனி குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. அதில் பொருளாதார வல்லுநர்கள், வரிவிதிப்பு வாரிய உறுப்பினர்கள் உள்பட 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.


உலகம்

1.ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2.ஜிம்பாப்வே அதிபர் முகாபே ராஜினாமா செய்ததையடுத்து அவரது 37 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

3.உபெர் நிறுவனத்தின் 5.7 கோடி வாடிக்கையாளர்கள், ஓட்டுநர்கள் குறித்த விவரங்களை ‘ஹேக்கர்ஸ்’ திருடிய நிலையில் இந்த ரகசியம் கசியாமல் இருப்பதற்காக அவர்களுக்கு 66 லட்சம் ரூபாய் பணத்தை அந்நிறுவனம் வழங்கிய தகவல் வெளியாகியுள்ளது.


வர்த்தகம்

1.பாரத் 22 இடிஎப் மூலம் மத்திய அரசு ரூ.14,500 கோடி திரட்டியிருக்கிறது.


விளையாட்டு

1.ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் தொடரை இந்தியாவின் செய்னா, சிந்து வெற்றியுடன் துவக்கினர்.

2.இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது


இன்றைய தினம்

1.2007 – அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது
2.1936 – முதலாவது லைஃப் இதழ் வெளியிடப்பட்டது

 

–தென்னகம்.காம் செய்தி குழு