தமிழகம்

1.எந்தவொரு பள்ளி வாகனங்களிலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் பள்ளிக் குழந்தைகளை ஏற்றக் கூடாது என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.


இந்தியா

1.மக்களவைத் தேர்தலில், ஹிமாசலப் பிரதேச மாநிலம் காங்க்ரா தொகுதியிலுள்ள பழங்குடியின கிராமத்தில் 100 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
காங்க்ரா தொகுதிக்குட்பட்ட அந்த கிராமத்தின் பெயர் பாரா பன்வால் ஆகும்.

2.17-வது மக்களவைக்கு பதிவான வாக்குகள் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

3.இந்திய கடற்படைக்கு புதிய தலைமை தளபதி தேர்வு செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு ராணுவ தீர்ப்பாயம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

4.போர் விமானத்தில் இருந்தபடி தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை ரகத்தை இந்திய விமானப் படை  வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது.


வர்த்தகம்

1.தென் கொரியாவைச் சேர்ந்த ஹுண்டாய் நிறுவனம் வென்யூ என்ற புதியகாரை இந்தியாவில்  அறிமுகம் செய்துள்ளது.


உலகம்

1.நிலவு உருவானபோதுதான் பூமியின் உயிர் ஆதாரமான நீர் கிடைத்ததாக, ஜெர்மனி விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் நேச்சர் அஸ்ட்ரானமி அறிவியல் இதழில் வெளியாகியுள்ளன.

440 கோடி ஆண்டுகளுக்கு முன்னர், செவ்வாய் கிரகத்தின் அளவு கொண்ட தெயியா என்ற பொருள் பூமி மீது மோதியதால்தான் பூமிக்கு நீர் கிடைத்ததாக ஜெர்மனியின் மன்ஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்ததுள்ளது.

பூமியில் தெயியா மோதியபோது ஏற்பட்ட மாற்றங்களில் ஒன்றாகத்தான் நிலவு உருவானது. மற்ற கிரகங்களுக்கு உள்ள நிலவுகளை விட தெயியா மோதலால் ஏற்பட்ட பூமியின் நிலவு பெரிய அளவில் இருந்ததால், அது பூமியின் சுழற்சியை ஸ்திரப்படுத்தி வருகிறது.
இதுவரை, நிலவு உருவாக்கத்துக்குக் காரணமான தெயியா பொருள், சூரியனுக்கு அருகிலிருந்து வந்தது என்று கருதப்பட்டது.

2.இலங்கையில் அமலில் உள்ள அவசர நிலையை அந்நாட்டு அதிபர் சிறீசேனா மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்துள்ளார்.

3.தென்சீனக் கடல் பகுதியில் இந்தியா-சிங்கப்பூர் கடற்படைகள் மேற்கொண்ட கூட்டுப் பயிற்சி புதன்கிழமையுடன் நிறைவடைந்தது.

4.திறமையாளர்களையும், முதலீட்டாளர்களையும் கவரும் வகையில் ஐக்கிய அரபு அமீரகம் அறமுகப்படுத்தியுள்ள 10 ஆண்டுகளுக்கான சிறப்பு நுழைவு இசைவு (விசா), இந்தியாவைச் சேர்ந்த இருவருக்கு முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.பிரிட்டீஷ் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

2.மகளிர் ஹாக்கி போட்டியில்  கொரிய அணியை 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் அணி வீழ்த்தியது.

3.இந்தியா ஓபன் குத்துச்சண்டை போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில், இந்திய வீரர்கள் சிவா தாபா, அமித் பாங்கல் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.


ன்றைய தினம்

  • சர்வதேச பல்லுயிர் பரவல் தினம்
  • இலங்கை குடியரசு தினம்(1972)
  • ஏமன் தேசிய தினம்
  • விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது(1990)
  • ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தை பெற்றனர்(1906)
  • முதல் அட்லஸ் 70 வரைபடங்களுடன் வெளியிடப்பட்டது(1570)

– தென்னகம்.காம் செய்தி குழு