Current Affairs – 23 May 2018
தமிழகம்
1.தூத்துக்குடி போராட்டத்தில் போலீஸார் பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டதில் இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர்.
2. 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் இன்று முதல் படிப்படியாக வெளியிடப்படுகின்றன.
இந்தியா
1.கர்நாடகா மாநிலத்தின் 24வது முதல்வராக, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் எச்.டி.குமாரசாமி இன்று பதவியேற்கிறார்.துணை முதல்வர் பதவி, காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வராவுக்கு வழங்கப்படுகிறது.
வர்த்தகம்
1.பொதுத் துறையைச் சேர்ந்த, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, 2017 -18ம் நிதியாண்டின், ஜனவரி – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், 7,718 கோடி ரூபாய் நிகர இழப்பை சந்தித்து உள்ளது.
உலகம்
1.மலேசியாவில் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் மீதான ஊழல் புகார் குறித்து அவரிடம் ஊழல் தடுப்பு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விளையாட்டு
1.உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஹாரிகேன் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
2.பிரான்சில் நடக்கும் சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா–வாசலின் (பிரான்ஸ்) ஜோடி, பிரான்சின் திரிஸ்டியன், கிரிகோய்ரே ஜோடியை வீழ்த்தியது.
3.கோல்கட்டா சர்வதேச செஸ் தொடரில் இந்தியாவின் நாராயணன் ஸ்ரீநாத் முதலிடம் பிடித்தார்.
இன்றைய தினம்
- மெக்சிகோ மாணவர் தினம்
- ஜமைக்கா தொழிலாளர் தினம்
- நெதர்லாந்து, ஸ்பெயினிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது(1568)
- ஜெர்மன் கூட்டாட்சி குடியரசு அமைக்கப்பட்டது(1949)
- மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூனான கார்னிவல் கிட் வெளி வந்தது(1929)
–தென்னகம்.காம் செய்தி குழு