தமிழகம்

1.மதுரையில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மக்களவைத் தேர்தலை ஒத்திவைக்கக் கோரியும், பெரிய வியாழன் தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவ பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளை வேறு இடத்துக்கு மாற்றக் கோரியும் தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.


இந்தியா

1.ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கத்தை (ஜேகேஎல்எப்) தடை விதித்துள்ளது மத்திய அரசு.


வர்த்தகம்

1.இந்தியக் கடற்படையில் பயன்படுத்தக் கூடிய அதிநவீன வான் கண்காணிப்பு ரேடார்களை, ரூ.1,200 கோடியில் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை பாதுகாப்புத் துறையிடமிருந்து டாடா பவர் ஸ்ட்ரேடஜிக் என்ஜினியரிங் டிவிஷன் (எஸ்இடி) நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

2.பங்கு முதலீட்டு ஆலோசனை வழங்குவதாக கூறி, முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் சுருட்டிய வலைதளங்களை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ தடை செய்துள்ளது.

3.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, வரும், 2020 – 21ம் நிதியாண்டில், 6.8 சதவீதமாக குறையும் என, தர நிர்ணய நிறுவனமான, ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ மறுமதிப்பீடு செய்து உள்ளது.

4.மத்திய அரசு, நடப்பு, 2018 – 19ம் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில், குறிப்பிட்ட அளவிலான பங்குகளை விற்பனை செய்து, 80 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்திருந்தது. தற்போது, இதைவிட, கூடுதலாக, 5,000 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.


உலகம்

1.உலகில் வேகமாக பொருளாதார வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது.

2.ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிவதற்கான (பிரெக்ஸிட்) காலக்கெடுவை இந்த மாதம் 29-ஆம் தேதியிலிருந்து மே மாதம் 22-ஆம் தேதி வரை நீட்டிக்க அந்த அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
எனினும், பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய இரு தரப்பு உறவு குறித்த ஒப்பந்தத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் இன்னும் ஒரு வாரத்துக்குள் ஏற்க வேண்டும்; அல்லது மே 23-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஐரோப்பிய யூனியன் தேர்தலில் பங்கேற்பதற்கு ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் சம்மதிக்க வேண்டும் என்று பிரிட்டனுக்கு அந்த அமைப்பு கடுமையான நிபந்தனை விதித்துள்ளது.

3.சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள குடியிருப்பு பகுதியில், காவலாளி பணியில் முதல்முறையாக நவீன ரோபோ ஈடுபடுத்தப்பட்டுள்ளது. பெய்ஜிங்கில் உள்ள மெய்வான் குடியிருப்பு பகுதியில் காவலாளி பணியில் ஈடுபடும் இந்த ரோபோவுக்கு மெய்போ(Meibao) என்று பெயரிடப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.தெற்காசிய மகளிர் கால்பந்து கோப்பை (SAFF) போட்டியில் தொடர்ந்து 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.

2.யூரோ 2020 கால்பந்து போட்டி தகுதிச் சுற்று ஆட்டங்களில் பெல்ஜியம், நெதர்லாந்து அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.


ன்றைய தினம்

  • உலக வானிலை தினம்
  • பாகிஸ்தான் குடியரசு தினம்(1956)
  • தமிழக அறிவியலாளர் ஜி.டி.நாயுடு பிறந்த தினம்(1893)
  • இந்திய சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் இறந்த தினம்(1931)
  • கலிபோர்னியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது(1868)

– தென்னகம்.காம் செய்தி குழு