இந்தியா

1.இந்தியாவின் அதிவேக ‘பிரமோஸ் சூப்பர்சானிக்’ ஏவுகணை நேற்று ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் பகுதியில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.இந்தியா – ரஷியா கூட்டு தயாரிப்பான ‘பிரமோஸ் சூப்பர்சானிக்’ ஏவுகணை சுமார் 2 ஆயிரம் கிலோ எடை கொண்டதாகும். இந்த ஏவுகணை 200 கிலோ வெடிப் பொருளுடன் சுமார் 290 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்டதாகும்.
2.டெல்லியில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் செல்லும் ஏர் இந்தியா விமான சேவை நேற்று முதல் தொடங்கியது.


உலகம்

1.அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் ஐ நா தூதராக பணியாற்றிய ஜான் பால்டன் என்பவரை நியமனம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
2.ஸ்லோவேக்கியா பிரதமராக இருந்த ராபர்ட் பிகோ ராஜினாமா செய்ததையடுத்து, பீட்டர் பெல்லெகிரினி புதிய பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்


இன்றைய தினம்

1.இன்று உலக வானிலை தினம்(World Meterological Day).
உலக வானிலை தினம் மார்ச் 23 அன்று கொண்டாடப்படுகிறது. இத்தினம் 1950ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் தட்பவெப்பநிலை உயர்வால் கடலின் நீர்மட்டம் உயர்கிறது. தற்போது பூமியின் வெப்பநிலையும் கூடிக்கொண்டே செல்கிறது. இதனை அடுத்து வரும் தலைமுறைக்கு வானிலையை சாதகமாக மாற்றிக்கொடுப்பது மனிதர்களின் கடமையாகும்.

 

–தென்னகம்.காம் செய்தி குழு