தமிழகம்

1.இந்தியாவிலேயே முன்மாதிரியாக, தமிழகத்தில் விவசாயிகளுக்கு இ-அடங்கல் வழங்கும் திட்டம் ஜூலை முதல் அமலுக்கு வருகிறது.விவசாயி ஒவ்வொருவருக்கும் தனித்தனியே குடிமக்கள் கணக்கு எண் வழங்கப்படும். அரசின் சேவைகளை இணைய வழியாக பெற்ற ஒவ்வொருவருக்கும் இந்த எண் வழங்கப்பட்டிருக்கும். இந்த எண் இல்லாவிட்டால் புதிதாகப் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

இந்த எண்ணை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு விவசாயியும் எந்தெந்த பருவத்துக்கு, எந்த வகையான பயிரை, எவ்வளவு பரப்பில் பயிரிட்டுள்ளோம் என்பதை நேரடியாக பதிவு செய்யலாம்.

2.தமிழகத்தில் விரைவில் ஊராட்சிகளில் வீடுகள்தோறும் இ-சேவை வசதி ஏற்படுத்த ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் தெரிவித்தார்.


இந்தியா

1.அங்கன்வாடி மையங்களை இடம் மாற்றியமைக்கும் அதிகாரத்தை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அளித்துள்ளது.

2.இந்தியா சார்பில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முதல் திட்டத்தின்படி, ககன்யான் விண்கலத்தை 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் விண்ணில் செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் இஸ்ரோ தலைவர் கே.சிவன்.


வர்த்தகம்

1.இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூன் 14-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 42,220 கோடி டாலராக (ரூ.29.55 லட்சம் கோடி) குறைந்துள்ளது என ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

2.இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கை கடந்த மே மாதத்தில் மதிப்பின் அடிப்படையில் 87 சதவீதம் சரிந்துள்ளதாக கிராண்ட் தோர்ன்டன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.


உலகம்

1.காலியாக உள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவிக்கு, ராணுவச் செயலராக பொறுப்பு வகித்து வரும் மார்க் எஸ்பெரின் பெயரை அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.

2.இலங்கையில் நெருக்கடி நிலை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.உலகக் கோப்பையில் ஷமி ஹாட்ரிக் விக்கெட்டுகள் சாதனை புரிந்தார்.

2.ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.


ன்றைய தினம்

  • உகாண்டா, போலந்து தந்தையர் தினம்
  • ஐக்கிய ராஜ்யத்தின் சமூக சேவை தினம்
  • பன்னாட்டு ஒலிம்பிக் அமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது(1894)
  • கிரிஸ்டோபர் ஷோல்ஸ், தட்டச்சு இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்(1868)

– தென்னகம்.காம் செய்தி குழு