தமிழகம்

1.சுனில் கிருஷ்ணன் எழுதிய அம்புப் படுக்கை’ எனும் சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருங்கை சேதுபதியின் சிறகு முளைத்த யானை’ கவிதைத் தொகுப்புக்கு பால சாகித்ய’ விருது கிடைத்துள்ளது.

2.திருவள்ளூர் அருகே பட்டரைபெரும்புதூர் கிராமத்தில் கடந்த 20 நாள்களாக நடந்து வந்த 2-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியின் மூலம் 351 பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.


இந்தியா

1.பால்வெளி மண்டலத்தில் சூரியனைப் போன்று நட்சத்திரத்தைச் சுற்றி வரும், புதிய கோள் ஒன்றை ஆமதாபாத் அபிஜித் சக்கரவர்த்தி தலைமையிலான விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 1.2 மீட்டர் தொலைநோக்கியுடன் கூடிய பி.ஆர்.எல். மேம்பட்ட தேடல் (பாராஸ்) கருவியின் உதவியுடன் கோளின் எடையளவைக் கணக்கிட்டு இந்தப் புதிய கோள் துல்லியமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பாராஸ் நிற மாலைக் கருவிதான் ஆசியாவிலேயே முதலாவதாகும்.

2.உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவிரிநீர் மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றின் தலைவர், உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


வர்த்தகம்

1. சர்வதேச அளவில் மதிப்புமிக்க பிராண்ட்ஸ் டாப் 100 நிறுவனங்களின் பட்டியலில் இந்திய அளவில் ஹெச்டிஎஃப்சி வங்கி மட்டும் இடம்பெற்றுள்ளது.


உலகம்

1.அரசு முறைப் பயணமாக நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பெல்ஜியத்தில் ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத் துறை முதன்மை பிரதிநிதி ஃபெடரிகா மோகேரினியை சந்தித்துப் பேசினார்.


விளையாட்டு

1. குரோஷியாவிடம் 3-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது  ஆர்ஜென்டீனா.கோஸ்டா ரிகா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரேஸில் நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.

2.டிஎன்பிஎல் 2018 சீசனில் பேட்டிங் தரத்தை கண்காணிக்க உதவும் ஸ்பெக்டாகாம் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.இந்த தொழில்நுட்பம் மூலமாக ஒரு வீரரின் பேட்டிங் வேகம், திறன் மற்றும் பேட்டில் சரியான இடத்தில் பந்து பட்டதா போன்ற விவரங்களை துல்லியமாக கண்காணிக்க முடியும். இந்ததொழில்நுட்பத்தை முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே நிறுவனம் வடிவமைத்துள்ளது.


ன்றைய தினம்

  • உகாண்டா, போலந்து தந்தையர் தினம்
  • ஐக்கிய ராஜ்யத்தின் சமூக சேவை தினம்
  • பன்னாட்டு ஒலிம்பிக் அமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது(1894)
  • கிரிஸ்டோபர் ஷோல்ஸ், தட்டச்சு இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்(1868)

–தென்னகம்.காம் செய்தி குழு