தமிழகம்

1.காவிரி ஆற்றில் 4 இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்படும். அவற்றில் கரூர் அருகே 1.5 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைக்கும் அளவிலான தடுப்பணை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

2.தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்தியா

1.சந்திரயான்-2 விண்கலத்துடன் ஏவப்பட்ட இந்தியாவின் மிகுந்த சக்திவாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-எம்1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ராக்கெட் ஏவப்பட்ட 16 நிமிடங்கள் 23 விநாடிகளில் ராக்கெட்டிலிருந்து சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக பிரித்துவிடப்பட்டது.

2.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (ஆர்டிஐ) திருத்தம் கொண்டுவரும் மசோதா, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம்  நிறைவேறியது.

3.அடுத்த ஆண்டில் சூரியனுக்கு விண்கலம் அனுப்பும் திட்டத்தை (ஆதித்யா-எல்1) செயல்படுத்த இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது.

4.மருத்துவ கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையிலான தேசிய மருத்துவ ஆணைய மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.

5.குஜராத் மாநிலத்தின் புதிய ஆளுநராக ஆச்சார்யா தேவவிரத்  பதவியேற்றார்.


வர்த்தகம்

1.நடப்பாண்டு ஜூன் மாதத்தில் விமான பயணிகள் எண்ணிக்கை கடந்தாண்டைக் காட்டிலும் 6.19 சதவீதம் அதிகரித்து 1.20 கோடியானது

2.டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் ரூ.151.24 கோடி நிகர லாபம் ஈட்டியது.


உலகம்

1.2024-ஆம் ஆண்டில் நிலவுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்ப அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா முடிவு செய்துள்ளது.

2.சர்வதேச அணுசக்தி முகமையின் (ஐஏஇஏ) தலைமை இயக்குநர் யுகியா அமனோ (72) காலமானார்.

3.உக்ரைன் நாடாளுமன்றத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் தற்போதைய அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியின் மக்கள் சேவகன் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.


விளையாட்டு

1.காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டியில் இந்திய ஆடவர், மகளிர் அணியினர் தங்கப் பதக்கங்களை வென்றனர்.

2.நியூபோர்ட் ஏடிபி டென்னிஸ் போட்டியில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் அமெரிக்க வீரர் ஜான் ஐஸ்நர்.


ன்றைய தினம்

  • இந்திய விடுதலை போராட்ட வீரர் லோகமான்ய திலகர் பிறந்த தினம்(1856)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா இறந்த தினம்(1925)
  • கனடா மாகாணம் என்ற பெயரில் வடஅமெரிக்காவில் பிரிட்டன் குடியேற்ற நாடு அமைக்கப்பட்டது(1840)
  • ஃபோர்டு மோட்டார் நிறுவனம் தனது முதல் காரை விற்பனை செய்தது(1903)

– தென்னகம்.காம் செய்தி குழு