தமிழகம்

1.இந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.கேரள மாநிலம் தொடர்ந்து 3-ஆவது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது.தெலங்கானா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் நல்ல ஆட்சியை தரும் மாநிலங்களில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

2.கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் டெம்பிள் ஜூவல்லரி என்கிற கோயில் ஆபரணத்துக்குப் புவிசார் குறியீட்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் கிடைத்துள்ளது.


இந்தியா

1.சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி ஊக்கத் தொகையை மத்திய அரசு உயர்த்த உள்ளது. அதன்படி, தற்போது அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் தொகையைக் காட்டிலும் 15 சதவீதம் கூடுதலாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


வர்த்தகம்

1. நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 13-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 40,507.5 கோடி டாலராக (ரூ.26.33 லட்சம் கோடி) சரிவைக் கண்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


உலகம்

1.அமெரிக்காவுக்கு எதிராக சீனா மறைமுகப் பனிப் போரில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க உளவுத் துறை அமைப்பான சிஐஏ-வின் கிழக்காசியப் பிரிவு துணை இயக்குநர் மைக்கேல் காலின்ஸ் கூறியுள்ளார்


விளையாட்டு

1.அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஹால் ஆஃப் ஃபேம் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஏடிபி உலக டூர் போட்டிகளில் ராம்குமார் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவது இது முதல் முறையாகும்.

2.இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார். இப்போட்டியில் தங்கம் வெல்லும் 3-ஆவது இந்தியர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.


ன்றைய தினம்

  • இந்திய விடுதலை போராட்ட வீரர் லோகமான்ய திலகர் பிறந்த தினம்(1856)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா இறந்த தினம்(1925)
  • கனடா மாகாணம் என்ற பெயரில் வடஅமெரிக்காவில் பிரிட்டன் குடியேற்ற நாடு அமைக்கப்பட்டது(1840)
  • ஃபோர்டு மோட்டார் நிறுவனம் தனது முதல் காரை விற்பனை செய்தது(1903)

–தென்னகம்.காம் செய்தி குழு