தமிழகம்

1.உலக முதலீட்டாளர் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று (ஜன. 23) தொடங்குகிறது. மாநாட்டை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்கிறார். மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில், தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை-2019-ஐ மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு சிறப்புரை ஆற்றவுள்ளார்.
தமிழக அரசு இரண்டாவது முறையாக உலக முதலீட்டாளர் மாநாட்டை இன்று நடத்தவுள்ளது.


இந்தியா

1.பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2.மத்​திய அரசு கொண்டு வந்​துள்ள புதிய 10 சத​வீத ஒதுக்​கீட்​டின் கீழ், பொரு​ளா​தா​ரத்​தில் பின்​தங்​கிய பொதுப்​பி​ரி​வி​ன​ருக்கு 5 சத​வீத இட​ஒ​துக்​கீடு வழங்​கப்​ப​டும் என்று ஆந்​திர அரசு அறி​வித்​துள்​ளது. மீத​முள்ள 5 சத​வீ​தத்தை காபு சமூக மக்​க​ளுக்கு உள்​ஒ​துக்​கீ​டாக வழங்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது என்​றும் மாநில அரசு தெரி​வித்​துள்​ளது.

3.சிவசேனையின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரேவுக்கு ரூ.100 கோடி செலவில் நினைவு மண்டபம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய மகாராஷ்டிர அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது.


வர்த்தகம்

1.சர்வதேச பொருளாதார வளர்ச்சி தொடர்பாக, கார்ப்பரேட் நிறுவனங்களின், சி.இ.ஓ., எனப்படும், தலைமை செயல் அதிகாரிகளின் கருத்துகளை தொகுத்து, பி.டபிள்யு.சி., நிறுவனம் தயாரித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.இந்தியா, இந்தாண்டு, பிரிட்டனை விஞ்சி, உலகின் நான்காவது கவர்ச்சிகரமான முதலீட்டு சந்தை என்ற சிறப்பை பெற்றுள்ளது. இந்தியா, வளரும் நட்சத்திரமாக ஜொலிக்கிறது.அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் முதலீட்டு களம் குறித்து, சி.இ.ஓ.,க்களின் நம்பிக்கை, முறையே, 27 மற்றும் 24 சதவீதமாக குறைந்துள்ளது.


உலகம்

1.சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், நடிகை உள்பட பல்வேறு பிரிவுகளுக்கான ஆஸ்கர் பரிந்துரை பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியானது.
உலக திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி அளிக்கப்படவுள்ளன.
சிறந்த திரைப்படப் பிரிவில், பிளாக் பாந்தர், கிரீன் புக், ரோமா, எ ஸ்டார் இஸ் பார்ன், வைஸ், தி ஃபேவரிட், பிளாக்கிளான்ஸ்மேன், போஹிமியன் ராப்ஸாடி ஆகியவை இடம்பெற்றுள்ளன.


விளையாட்டு

1.சர்​வ​தேச கிரிக்கெட் கவுன்​சி​லின் (ஐசிசி) 2018-இன் சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த ஒரு​நாள் வீரர், மற்​றும் ஆண்​டின் சிறந்த வீர​ருக்​கான கேரி சோபர்ஸ் விருது என 3 (ஹாட்ரிக்) விரு​து​களை ஒரு சேர வென்ற ஓரே வீரர் என்ற சிறப்பை பெற்​றார் இந்​திய அணி​யின் கேப்​டன்  கோலி.

2.ஆஸ்​தி​ரே​லிய ஓபன் டென்​னிஸ் போட்டி​யின் அரை​யி​று​திச் சுற்​றுக்கு ஆட​வர் பிரி​வில் ரபேல் நடால், ஸ்டெ​பானோ சிட்ஸி​பாஸ், மக​ளிர் பிரி​வில் குவிட்​டோவா, டேனி​யல் காலின்ஸ் ஆகி​யோர் தகுதி பெற்​றுள்​ள​னர்.


ன்றைய தினம்

  • இந்திய சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம்(1897)
  • ராமலிங்க அடிகளார் அருட்பெருஞ்சோதியான தினம் (1873)
  • சென்னை மாநிலத்தில், தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது(1957)
  • இஸ்ரேல் சட்டசபை, ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தது(1950)
  • புனித ரோம் பேரரசின் கீழ் லீக்டன்ஸ்டைன் நாடு உருவாக்கப்பட்டது(1719)

– தென்னகம்.காம் செய்தி குழு