இந்தியா

1.தென்னிந்தியாவின் முதலாவது பெண் டாக்சி டிரைவர் செல்விக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந் ‘முதல் பெண்மணி’ விருது வழங்கினர்.


உலகம்

1.உலகெங்கும் உள்ள பெண்களின் கல்விக்கு உதவுவதற்காக மலாலாவுடன் இணைந்து நிதி திரட்ட ஆப்பிள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
2.உலக பொருளாதார கூட்டமைப்பு வெளியிட்ட பொருளாதார அடிப்படையில் வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 62-வது இடத்தில் உள்ளது. நேபாளம் 22-வது இடத்திலும், சீனா 26-வது இடத்திலும், வங்காள தேசம் 34-வது இடத்திலும், இலங்கை 40-வது இடத்திலும், பாகிஸ்தான் 47-வது இடத்தில் உள்ளன. இந்தப்பட்டியலில் லித்துவேனியா முதல் இடத்தில் உள்ளது.இதில் அமெரிக்காவுக்கு 23-வது இடமும், ஜப்பானுக்கு 24-வது இடமும் கிடைத்துள்ளது.


இன்றைய தினம்

1.1957 – சென்னை மாநிலத்தில், தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு