தமிழகம்

1.திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் அதிமுக எம்பி ராஜேந்திரன் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 62.

2.மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகம், கேரளம், கர்நாடகம் மற்றும் புதுச்சேரி மாநில காவல் துறைத் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் உதகையில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

3.சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட செந்தில்குமார் ராமமூர்த்தி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீ பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


இந்தியா

1.பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 12 லட்சம் பேருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அந்த திட்டத்தை செயல்படுத்தும் ஆயுஷ்மான் பாரத் அமைப்பின் தலைமைச் செயலதிகாரி இந்து பூஷண் தெரிவித்துள்ளார்.

2.நாடு முழுவதும் 7 விமான நிலையங்களில் ரூ.497 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்புத் திட்டங்களை மேற்கொள்ள விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அடிக்கல் நாட்டினார்.


வர்த்தகம்

1.தென் கிழக்கு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு, மிகப் பெரிய அளவில் முதலீட்டு வாய்ப்புகள், இந்தியாவில் இருப்பதாக, இந்தியா- ஏஷியான் எக்ஸ்போ – 2019’ மாநாட்டில் பங்கேற்ற வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர், சி.ஆர்.சவுத்ரி கூறியுள்ளார்.

2.தற்போது, மந்த நிலையில் உள்ள வாகனங்கள் விற்பனை, அடுத்த நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில் அதிகரிக்க துவங்கும் என, தர நிர்ணய நிறுவனமான, ‘இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரீசர்ச்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.


உலகம்

1.நிலவில் ஆய்வுகள் மேற்கொள்வதற்காக தனியார் அமைப்பால் உருவாக்கப்பட்ட பெரஷீத் என்ற இஸ்ரேல் விண்கலம், அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

2.இந்திய மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியதற்காகவும், பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உலக அமைதிக்குப் பங்களித்ததற்காகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவிக்கப்பட்ட தென் கொரிய நாட்டின் உயரிய விருதான சியோல் அமைதி விருதினை மோடி பெற்றுக் கொண்டார்.


விளையாட்டு

1.புரோ வாலிபால் லீக் முதல் சீசன் போட்டியின் சாம்பியன் பட்டத்தை சென்னை ஸ்பார்டன்ஸ் அணி தட்டிச் சென்றது. காலிக்கட் ஹீரோஸ் அணியை 3-0 என்ற நேர் செட்களில் வென்றது.

2.தமிழ்நாடு டேபிள் டென்னிஸ், இந்து ஸ்போர்ட்ஸ் சார்பில் டிடிஎஸ்எல் சூப்பர் லீக் போட்டிகள் வெள்ளிக்கிழமை சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் மாலில் தொடங்கின.


ன்றைய தினம்

  • கயானா குடியரசு தினம்(1970)
  • உலக தரநிர்ணய அமைப்பு( ஐ.எஸ்.ஓ.,) ஆரம்பிக்கப்பட்டது(1947)
  • ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது(1905)
  • ருடொல்ஃப், டீசல் இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்(1893)
  • புளூட்டோனியம் முதல் முறையாக உருவாக்கப்பட்டது(1941)

– தென்னகம்.காம் செய்தி குழு