தமிழகம்

1.தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் முற்றிலும் ஆன்லைன் மூலமாக மட்டுமே ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

2.அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான காலண்டரில், பழனி பள்ளி மாணவர் வரைந்த ஓவியம் இடம் பெற்றுள்ளது.


இந்தியா

1.நாட்டின் மிக நீளமான சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மேம்பாலத்தில் முதல் பயணிகள் ரயில் சேவையை வரும் செவ்வாய்க்கிழமை (டிச. 25) பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகர் மாவட்டத்தில் பாய்ந்தோடும் பிரம்மபுத்திரா நதியின் தெற்கு பகுதியிலிருந்து அருணாசலின் எல்லையில் உள்ள சிலாபதர் வரை பகிபீல் பாலம் இணைக்கிறது.

2.ஆந்திராவில் கடந்த 4 ஆண்டுகள் வரையிலான ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட 10 முக்கியத் திட்டங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.


வர்த்தகம்

1.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு டிசம்பர் 14-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் ரூ.4,297 கோடி (61 கோடி டாலர்) சரிவைக் கண்டுள்ளது.

2.தொலைக்காட்சிப் பெட்டி, சினிமா டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட 23 பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான வரியைக் குறைப்பதாக ஜிஎஸ்டி கவுன்சில் சனிக்கிழமை அறிவித்தது.


உலகம்

1.சீனாவின் செங்டூ நகரில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய-சீன ராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட பயிற்சி சனிக்கிழமை நிறைவு பெற்றது.

2.காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா.பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் பேசியுள்ளார்.


விளையாட்டு

1.வரும் ஆண்டு 2019 முதல் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் இறுதி செட் டைபிரேக்கர் முறையில் புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என இயக்குநர் கிரெய்க் டைலி தெரிவித்துள்ளார்.
இறுதி செட் என்பது 6 கேம்களுக்கு பின்னர் நிர்ணயிக்கப்படும். இதன்படி 6-6 என்ற புள்ளிக்கு பின்னர் 10 புள்ளிகளைப் பெறும் முதல் வீரர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.


ன்றைய தினம்

இந்திய விவசாயிகள் தினம்

முதல் டிரான்சிஸ்டர் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது

தென்னகம்.காம் செய்தி குழு