இந்தியா

1.தேசிய ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் அங்கன்வாடியில் உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கும் இனி ஆதார் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2.குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ள பா.ஜ.க, முதல்வராக விஜய் ரூபானி, துணை முதல்வராக நிதின் படேல் மீண்டும் தேர்வு செய்துள்ளது.


விளையாட்டு

1.இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 35 பந்துகளில் சதமடித்து உலக சாதனையை சமன் செய்துள்ளார்.தென்னாப்பிரிக்க வீரர் மில்லர் 35 பந்துகளில் சதமடித்தது உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த போட்டியில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.


இன்றைய தினம்

1.1954 – முதலாவது மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு