தமிழகம்

1.அப்துல் கலாம் விருதினை இஸ்ரோ தலைவர் சிவன் தலைமைச் செயலகத்தில் பெற்றுக் கொண்டார். விண்வெளித் துறையில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.


இந்தியா

1.மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய செயலராக அஜய் குமார் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

2.2020 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 3ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.


வர்த்தகம்

1.இந்திய ரயில்வே உணவு-சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி), பங்கு வெளியீட்டில் களமிறங்க ஆயத்தமாகியுள்ளது.

2.பொதுக் காப்பீட்டு வர்த்தகத்தில் இணைந்து செயல்படும் வகையில் கரூர் வைஸ்யா வங்கி மற்றும் டிஜிட் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகியவை உடன்பாடு செய்து கொண்டுள்ளன.

3.அமெரிக்காவைச் சேர்ந்த வலைதள வர்த்தக நிறுவனமான அமேஸானுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய புதிய வளாகம் தெலங்கானா ஹைதராபாதில் திறக்கப்பட்டுள்ளது.


உலகம்

1.மூன்று நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தின் முதல்கட்டமாக பிரான்ஸுக்கு வியாழக்கிழமை சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர்.

2.நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் ஞவாளியுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். பிராந்திய, சர்வதேச விவகாரங்களில் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.


விளையாட்டு

1.அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றில் செக் குடியரசு வீராங்கனை டெனிசா அலெர்டோவோவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார் இந்தியாவின் இளம் வீராங்கனை அங்கிதா ரெய்னா.

2.சர்வதேச மோட்டார்சைக்கிள் கூட்டமைப்பான எஃப்ஐஎம் சார்பில் நடத்தப்பட்ட சர்வதேச மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் உலகக் கோப்பை போட்டியில் மகளிர் பிரிவில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீராங்கனை ஐஸ்வர்யா பிஸ்ஸே.
இந்தப் போட்டி மொத்தம் 4 ரேஸ் பந்தயங்களை உள்ளடக்கியதாகும். இந்த நான்கிலும் பங்கேற்ற ஒரே வீராங்கனையும் ஐஸ்வர்யா என்பது குறிப்பிடத்தக்கது.


ன்றைய தினம்

  • ருமேனியா விடுதலை தினம்(1944)
  • உக்ரேன் கொடி நாள்
  • மெக்சிகோ, ஸ்பெயினிடம் இருந்து விடுதலை அடைந்தது(1821)
  • உலக தேவாலயங்களின் தலைமை கழகம் ஏற்படுத்தப்பட்டது(1948)

– தென்னகம்.காம் செய்தி குழு