தமிழகம்

1.மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் நினைவு வளைவு அமைக்கப்பட உள்ளது.


இந்தியா

1.ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மூத்த தலைவருமான ஆஷிஷ் கேதன் புதன்கிழமை அறிவித்தார்.

2.கோவா கணக்கியல் துறையில் அரசு கணக்காளர் பணிக்கு விண்ணப்பித்து தேர்வெழுதிய 8000 பேரும் தோல்வியடைந்த விநோதம் நிகழ்ந்துள்ளது.


வர்த்தகம்

1.செல்லிடப் பேசிகளுக்கான தொலைத் தொடர்பு சேவையைப் பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, கடந்த ஜூன் மாதம் 114.65 கோடியாக உயர்ந்தது.

2.தேன் மற்­றும் தேன் பொருட்­களில் கலப்­ப­டத்தை தடுக்க, அவற்­றுக்கு தரக் கட்­டுப்­பாட்டு
விதி­மு­றை­களை, மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது.


உலகம்

1.அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முன்னாள் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர் பால் மானாஃபோர்ட்டும், டிரம்பின் முன்னாள் வழக்குரைஞர் மைக்கேல் கோஹனும் தங்களுடைய குற்றச் செயல்களை ஒப்புக் கொண்டனர். இது, டிரம்ப் நிர்வாகத்துக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.


விளையாட்டு

1.இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு புதன்கிழமை ஒரு தங்கம், 4 வெண்கலம் என 5 பதக்கங்கள் கிடைத்தன.
இதில் மகளிருக்கான 25 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ராஹி சர்னோபத் தங்கம் வென்று வரலாறு படைத்தார். ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவருக்கான ஹாக்கி விளையாட்டில் இந்தியா 26-0 என்ற கணக்கில் ஹாங்காங் சீனாவை வீழ்த்தி புதிய சாதனையுடன் வெற்றி பெற்றது.ஆசிய விளையாட்டுப் போட்டியில் டென்னிஸ் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார்.


ன்றைய தினம்

  • ருமேனியா விடுதலை தினம்(1944)
  • உக்ரேன் கொடி நாள்
  • மெக்சிகோ, ஸ்பெயினிடம் இருந்து விடுதலை அடைந்தது(1821)
  • உலக தேவாலயங்களின் தலைமை கழகம் ஏற்படுத்தப்பட்டது(1948)
  • தென்னகம்.காம் செய்தி குழு