தமிழகம்

1.தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணைய (டிஎன்இஆர்சி) உறுப்பினர் நியமன விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

2.தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த மேலும் 3 மாதங்கள் அவகாசம் தேவை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.


இந்தியா

1.ஏழு கட்ட மக்களவைத் தேர்தலில் ஏற்கனவே ஏப்ரல் 11ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவும், ஏப்ரல் 18ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் முடிந்துவிட்டது. இந்நிலையில் 13 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்களுக்குட்பட்ட 117 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.


வர்த்தகம்

1.டுவிட்டர்  நிறுவனத்தின் இந்தியப் பிரிவு மேலாண்மை இயக்குநராக (எம்.டி.) மணீஷ் மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். டுவிட்டரில் இந்தியச் செயல்பாடுகளுக்கு அவர் தலைவராக இருப்பார்.

2.கடந்த 2018-19 நிதியாண்டில் கார் விற்பனையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் குறைந்த விலை பிரிவு மாருதி ஆல்டோ முதலிடத்தை பிடித்துள்ளது. பட்டியலில் முதல் 10 இடங்களில் 7 இடங்களை மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்புகளே ஆக்கிரமித்துள்ளன.


உலகம்

1.தொடர் குண்டுவெடிப்புகள் எதிரொலியாக, இலங்கையில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது.

2.மசூத் அஸாரை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் மூலம் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா உதவ வேண்டும் என சீனா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்-யீ உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது வலியுறுத்தினார்.


விளையாட்டு

1.ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனை வீழ்த்தி இந்திய வீரர்கள் வெற்றி பெற்றனர்.
பாங்காக்கில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை ஆடவர் 56 கிலோ பிரிவில் நடப்பு உலக சாம்பியன் கஜகஸ்தானின் கைரட் எரலியேவை 3-2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீரர் கவிந்தர் சிங் பிஷ்ட், ஒலிம்பிக் சாம்பியன் தோல்வி:
அதே போல் ஆடவர் 52 கிலோ பிரிவில் இந்திய வீரர் அமித் பங்கால் 4-1 என்ற புள்ளிக் கணக்கில் ரியோ ஒலிம்பிக் சாம்பியன் ஹஸன்பாய் டுஸ்மடோவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

2.ஏடிபி சர்வதேச தரவரிசையில் 5 இடங்கள் முன்னேறி 75-ஆவது இடத்தில் உள்ளார் இந்திய  வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன்.

3.ஆசிய தடகள சாம்பியன் போட்டியில் 800 மீ. ஓட்டத்தில் கோமதி மாரிமுத்துவும், குண்டு எறிதலில் தஜிந்தர் சிங்கும் தங்கப் பதக்கம் வென்றனர்.


ன்றைய தினம்

  • சர்வதேச புவி நாள்
  • ரஷ்ய புரட்சியாளர் விளாடிமிர் லெனின் பிறந்த தினம்(1870)
  • பிரமோஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது(2006)
  • ஐரோப்பிய போர்ச்சுகீசியரான பேதுரோ கப்ரால் முதன் முறையாக பிரேசிலை கண்டார்(1500)

– தென்னகம்.காம் செய்தி குழு