இந்தியா

1.ஐதராபாத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக சீத்தாராம் யெச்சூரி நேற்று மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.


உலகம்

1.உலகின் மிகவும் முதிய மூதாட்டியான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நபி தஜிமா தனது 117-வது வயதில் காலமானார்.இவர் உலக சாதனைகளை பதிவு செய்துவரும் கின்னஸ் புத்தகத்தில் உலகின் மிகவும் முதிய மூதாட்டியாக இடம்பிடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
2.அசர்பைஜான் நாட்டின் புதிய பிரதமராக நோர்வுஸ் மாமேடோவ் பதவியேற்க அந்நாட்டின் பாராளுமன்றம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.


ன்றைய தினம்

1.இன்று உலக புத்தக தினம் மற்றும் உலக பதிப்புரிமை தினம்(World Book and Copy right Day).
யுனெஸ்கோவின் பொது மாநாடு 1995ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்றபோது ஏப்ரல் 23ஐ உலக புத்தக தினமாக அறிவிக்கப்பட்டது. இத்துடன் தனிப்பிரசுர உரிமைக்கான தினத்தையும் கொண்டாட வேண்டும் என ரஷ்யப் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர். ஆகையால் ஏப்ரல் 23 அன்று உலக புத்தக தினம் மற்றும் தனிப்பிரசுர உரிமை தினமாகக் கொண்டாடப்படுகிறது. புத்தக தினத்தின்போது புத்தகங்களைப் பரிசளித்து மகிழ்வோம்.
2.இன்று ஆங்கிலமொழி தினம்(English Language Day).
ஆங்கிலமொழி ஐக்கிய நாடுகளின் 6 அலுவலக மொழிகளில் ஒன்றாகும். வில்லியம் சேக்ஷ்பியரின் பிறந்த நாளை அடிப்படையாகக்கொண்டு ஆங்கிலமொழி தினம் ஏப்ரல் 23 அன்று கொண்டாடப்படுகிறது. இது 2010ஆம் ஆண்டுமுதல் கடைப்பிடிக்கப்படுகிறது. வரலாறு, கலாச்சாரம் மற்றும் சாதனைகளை அறிந்துகொள்ளவும் மொழி சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு