தமிழகம்

1. விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அக்டோபர் 21-இல் நடைபெறுகிறது.


இந்தியா

1.கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக 4 பேர் பதவியேற்கின்றனர்.

2.மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணா சட்டப் பேரவைகளுக்கு ஒரே கட்டமாக வரும் அக்டோபர் 21-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை அக். 24-இல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

3.திரிபுரா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிக்கு, நீதிபதி அகில் குரேஷியின் பெயரை, கொலீஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதன் மூலம், மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக குரேஷி நியமிக்கப்பட வேண்டும் என்ற கொலீஜியத்தின் முந்தைய முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.


வர்த்தகம்

1.இந்தியாவில் உள்ள 12 முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு போக்குவரத்து ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான கால அளவில் 1.85 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

2.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பர் 14-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 42,896 கோடி டாலராக குறைந்தது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


உலகம்

1.பின்லாந்து சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அந்நாட்டின் முக்கியத் தலைவர்களுடன் பயங்கரவாதத்தை ஒடுக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

2.இஸ்ரேலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லாததால் தேசிய ஒற்றுமை அரசு அமையவிருக்கும் நிலையில், 3-ஆவது இடத்தை வகிக்கும் அரபுக் கட்சித் தலைவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அவ்வாறு நடந்தால், இஸ்ரேல் வரலாற்றில் அரபு இஸ்ரேலியர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராவது அதுவே முதல் முறையாகும்.


விளையாட்டு

1.உலக குத்துச்சண்டை இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த முதல் இந்தியரான அமித் பங்கால், வெள்ளி வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.

2.கஜகஸ்தானில் நடைபெற்றுவரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தார் இந்திய வீரர் தீபக் புனியா.


ன்றைய தினம்

  • ஆட்டோமொபைல் இல்லா தினம்
  • மாலி விடுதலை தினம்(1960)
  • இந்திய-பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்தது(1965)
  • அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆட்டோமொபைல் முதன் முதலில் காட்சிப்படுத்தப்பட்டது(1893)

– தென்னகம்.காம் செய்தி குழு