தமிழகம்

1.சாலையிலும், தண்டவாளத்திலும் செல்லும் சரக்கு ரயில் பெட்டியின் சோதனை ஓட்டம் வேலூர் -காட்பாடி இடையே புதன்கிழமை நடைபெற்றது. இதன் சேவை, சென்னை – ஹரியாணா மாநிலம், பால்வால் இடையே விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

2.மியான்மர் தலைநகர் யாங்கூனில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்து நடத்திய பன்னாட்டுத் தமிழ்ப் பேச்சுப் போட்டியில் இந்திய மாணவர் நரேன் கெளதம் நாகராஜன் வெற்றி பெற்றார்.

3.தமிழகத்தில் வரும் கல்வியாண்டு (2019-20) முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான செப்டம்பர் மாத துணைத் தேர்வு முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


இந்தியா

1.ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனமும் கூட்டாளியாக இருக்க வேண்டும் என இந்திய அரசு பரிந்துரைத்தது என்று பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்சுவா ஹலாந்த் தெரிவித்துள்ளார்.

2.மத்திய அரசு இரண்டாவது கட்டமாக எடுத்த நடவடிக்கை மூலம் 55,000 போலி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிறுவனங்கள் விவகாரத் துறை இணையமைச்சர் பி.பி.செளதரி தெரிவித்தார்.

3.பொதுத் துறை உருக்கு உற்பத்தி நிறுவனமான செயில்’ நிறுவனத்தின் புதிய தலைவராக அனில் குமார் சௌதரி நியமிக்கப்பட்டுள்ளார்.


வர்த்தகம்

1.வீட்டு வசதி கடன் நிறு­வன பங்­கு­கள் விலை சரி­வால், பங்­குச் சந்தை வர்த்­த­கத்­தின் இடையே, ‘சென்­செக்ஸ்’ 1,000 புள்­ளி­கள் சரிந்­தது.யெஸ் பேங்க் பங்­கின் விலை, ஓராண்­டில் இல்­லாத
அள­விற்கு சரிந்­த­தால், வங்­கி­யின் சந்தை மூல­த­னம், 14,452 கோடி ரூபாய் குறைந்து, பங்கு
முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு பெரும் இழப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

2.நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக அதிகரிக்கும் என்று சர்வதேச தரக் குறியீட்டு நிறுவனமான ஃபிட்ச்(Fitch)  தெரிவித்தது.

3.நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் டிராக்டர்கள் மற்றும் வேளாண் உபகரணங்களை தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் வகையில், ஜேபார்ம் சர்வீசஸ் என்ற புதிய செயலியை டாஃபே நிறுவனம் அறிமுகப்படுத்தியது.


உலகம்

1.இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் இடையே அடுத்த வாரம் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.

2.சூரியனைச் சுற்றி வரும் நுண்கோள்களில் ஒன்றில் ஆய்வுகள் மேற்கொள்வதற்காக, ஜப்பான் விண்வெளி ஆய்வு அமைப்பின் இரண்டு ஆய்வுக் கலங்கள் அந்த நுண்கோளை நோக்கி வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டன.
அந்த நுண்கோளின் மிகக் குறைந்த ஈர்ப்பு விசையையும், அதன் வளி மண்டலத்தையும் பயன்படுத்தி ஹாயாபுஸா-2′ என்ற அந்த ஆய்வுக்கலங்கள் தரையிறங்கும் எனவும், புவி மண்டலம் குறித்து புதிய உண்மைகளைக் கண்டறிவதற்கான பல ஆய்வுகளை மேற்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

3.வியட்நாம் அதிபர் டிரான் டாய்குவாங் (61), உடல் நீண்ட நாள் உடல் நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானார்.


விளையாட்டு

1.மேற்கு வங்கத்தின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் தனக்கு வழங்கிய டாக்டர் பட்டத்தை (டி.லிட்) ஏற்க மறுத்து விட்டார்  சச்சின் டெண்டுல்கர்.

2.துரோணாச்சார்யா விருது தேர்வுப் பட்டியலில் தனது பெயர் புறக்கணிக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த இந்திய வில்வித்தை அணியின் பயிற்சியாளர் ஜிவன்ஜோத் சிங் தேஜா பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


ன்றைய தினம்

  • ஆட்டோமொபைல் இல்லா தினம்
  • மாலி விடுதலை தினம்(1960)
  • இந்திய-பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்தது(1965)
  • அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆட்டோமொபைல் முதன் முதலில் காட்சிப்படுத்தப்பட்டது(1893)
  • தென்னகம்.காம் செய்தி குழு