தமிழகம்

1.தமிழகத்தில் இரண்டு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் வாக்குப் பதிவு நடைபெற்றது. அதிகபட்சமாக விக்கிரவாண்டியில் 84.36 சதவீத வாக்குகளும், நான்குனேரியில் 66.10 சதவீத வாக்குகளும் பதிவாகின.


இந்தியா

1.மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் திங்கள்கிழமை சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், மகாராஷ்டிரத்தில் 60 சதவீதமும், ஹரியாணாவில் 65 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

2.நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18-ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 13-ஆம் தேதி முடிவடையவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தின் இருஅவை செயலர்களுக்கும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் அறிக்கை அனுப்பியுள்ளது.


வர்த்தகம்

1.செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 117 கோடியாக அதிகரித்துள்ளது என இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு ஜூலையில் 116.83 கோடியாக இருந்த செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாத இறுதியில் 117.1 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. ஒட்டுமொத்த தொலைபேசி பயனாளர்கள் எண்ணிக்கையில் இது 98 சதவீதமாகும்.

2.சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தை, 18 ஆண்டுகளுக்கு பின், முதன் முறையாக இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு இந்தியா வந்துவிட்டதாக, தர நிர்ணய நிறுவனமான, ‘கேர் ரேட்டிங்ஸ்’ தெரிவித்துள்ளது.


உலகம்

1.கர்தார்பூர் வழித்தடத் திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் அக்டோபர் 23-ஆம் தேதி (புதன்கிழமை) கையெழுத்திடத் தயார் என்று இந்தியா அறிவித்துள்ளது.
சீக்கிய மத நிறுவனரான குருநானக் தனது கடைசி காலத்தில் வசித்த தேரா பாபா நானக் குருத்வாரா பாகிஸ்தானின் கர்தார்பூரில் அமைந்துள்ளது.

2.வெளிநாட்டு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதில் இந்தியாவுக்குப் போட்டியளிக்கும் வகையில், புதிய ரக வர்த்தக ராக்கெட் சேவையை சீனா தொடங்கியுள்ளது.
ஸ்மார்ட் டிராகன் 3 (எஸ்டி 3) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய தலைமுறை ராக்கெட், விண்வெளிக்கு 1.5 டன் எடையளவு பொருள்களை சுமந்து செல்லும் திறன் படைத்ததாகும்.

3.செல்லிடப்பேசிகளில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகள் எளிதில் தீப்பிடிக்கும், சூடாகும் என்று புகார்கள் இருந்து வரும் நிலையில், எளிதில் தீப்பிடிக்காத லித்தியம்-அயன் பேட்டரிகளை அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாக்கின்ஸ் இயற்பியல் ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

4.6-ஆவது உலக இணைய மாநாடு ஞாயிற்றுக்கிழமை சீனாவின் சேஜியாங் மாநிலத்தின் வூசெனில் துவங்கியது. இவ்வாண்டு இணையம் பயன்பாட்டுக்கு வந்த 50-ஆவது ஆண்டாகும்.


விளையாட்டு

1.சென்னையில் நடைபெற்று வரும் தேசிய ஜூனியர், சப்-ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பல்வேறு வயது பிரிவுகளில் உயர்நிலை வீரர்கள் தோல்வியடைந்தனர்.


ன்றைய தினம்

  • உலக மாமியார்கள் தினம்
  • இந்திய விடுதலை போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1828)
  • அர்ஜெண்டினாவிற்கு முதல் தொலைதொடர்பு ஏற்படுத்தப்பட்டது(1875)
  • இந்தியா தனது முதல் ஆளில்லா செயற்கைகோளான சந்திராயன் 1-ஐ விண்ணில் செலுத்தியது(2008)
  • பல்கட்சிக் குழு கனடாவின் கொடிக்கான வடிவமைப்பை முடிவு செய்தது(1964)
  • மாலி, பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது(1960)

– தென்னகம்.காம் செய்தி குழு