Current Affairs – 22 October 2018
தமிழகம்
1.மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாவட்டவாரியாக பார்வையாளர்களை நியமித்துள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சு.திருநாவுக்கரசர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.
2.நாடு முழுவதும் உள்ள ரயில்பாதைகள் அனைத்தும் ரூ.35 ஆயிரம் கோடியில் மின்மயாக்கும் பணி விரைவில் துவங்க உள்ளதாக ரயி்ல்வே வாரிய உறுப்பினர் கன்ஷியாம்சிங் கூறினார்.
இந்தியா
1.சர்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷியின் இடைத்தரகர் ஒருவரிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2.தேசிய காவலர் நினைவகம் மற்றும் அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
உலகம்
1.மாலத்தீவில் செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்தல் முடிவுகளை எதிர்த்து தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, தேர்தலில் அவரது தோல்வி உறுதியாகியுள்ளது.
விளையாட்டு
1.பஜ்ரங் புனியா, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் 65 கிலோ அரையிறுதியில் கியூபாவின் அலெஜான்ட்ரோ என்ரிக்கை 4-3 என்ற புள்ளிக்கணக்கில் வென்று இறுதிச் சுற்றுக்கு நுழைந்தார்.
2.டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டி மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் சாய்னா நெஹ்வால் தோல்வியுற்றார்.
3.இத்தாலி சீரி ஏ கால்ந்து லீக் போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை இரவு ஜுவெஎன்டஸ்-ஜெனொவோ அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் ரொனால்டோ தனது 400-ஆவது கோலை அடித்தார்.
இன்றைய தினம்
- உலக மாமியார்கள் தினம்
- இந்திய விடுதலை போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1828)
- அர்ஜெண்டினாவிற்கு முதல் தொலைதொடர்பு ஏற்படுத்தப்பட்டது(1875)
- இந்தியா தனது முதல் ஆளில்லா செயற்கைகோளான சந்திராயன் 1-ஐ விண்ணில் செலுத்தியது(2008)
- பல்கட்சிக் குழு கனடாவின் கொடிக்கான வடிவமைப்பை முடிவு செய்தது(1964)
- மாலி, பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது(1960)
- தென்னகம்.காம் செய்தி குழு