Current Affairs – 22 November 2018
தமிழகம்
1.திருப்பத்தூர் அருகே கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்து நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் க.மோகன் காந்தி, காணிநிலம் மு.முனிசாமி, ஆசிரியர் சத்தியராஜ் ஆகியோர் மேற்கொண்ட களஆய்வில் இந்த நடுகல் கண்டறியப்பட்டது.
இந்தியா
1.ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப் பேரவையை அந்த மாநிலத்தின் ஆளுநர் சத்யபால் மாலிக் கலைத்து உத்தரவிட்டுள்ளார்.
2.எல்லை விவகாரங்கள் தொடர்பாக, இந்தியா, சீனா இடையே 21-ஆவது கட்ட பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை (நவ.23) தொடங்கவுள்ளது.
சீனாவின் செங்டு நகர் அருகேயுள்ள டுஜியாங்யான் பகுதியில் 2 நாள்கள் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும், சீனா சார்பில் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ-யும் பங்கேற்கவுள்ளனர்.
3.இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் திறன் மேம்பாட்டு திட்ட அலுவலகம் சார்பில் பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் நவ.28-ஆம் தேதி விண்வெளி உற்பத்திப் பொருள் உச்சி மாநாடு நடக்கவிருக்கிறது.
வர்த்தகம்
1.ஹூருன் இந்தியா ரிப்போர்ட் நிறுவனம், ரியல் எஸ்டேட் துறையில், இந்தாண்டு செப்டம்பர் நிலவரப்படி, 100 பெரும் பணக்காரர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளது.இந்திய ரியல் எஸ்டேட் துறையில், இந்தாண்டு, 100 தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு, 1.86 லட்சம் கோடியில் இருந்து, 27 சதவீதம் உயர்ந்து, 2.36 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
2.இந்தியாவில் கம்ப்யூட்டர் சந்தை, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான, இரண்டாவது காலாண்டில், 20.2 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளதாக, ஐ.டி.சி., நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம்
1.சர்வதேச காவல்துறையான இன்டர்போல் அமைப்பின் புதிய தலைவராக, தென்கொரிய நாட்டைச் சேர்ந்த கிம் ஜோங் யாங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துபாயில் நடைபெற்ற இன்டர்போல் உறுப்பு நாடுகளின் கூட்டத்தில் அவர் தேர்வு செய்யப்பட்டார்.
2.அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு அளிக்க இருந்த சுமார் ரூ.11 ஆயிரம் கோடி பாதுகாப்பு நிதியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது என்று அந்நாட்டு ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
விளையாட்டு
1.லக்னெளவில் நடைபெறும் சையத்மோடி உலக சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் முதல் சுற்று ஆட்டங்களில் சாய்னா நெவால், காஷ்யப் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இன்றைய தினம்
- லெபனான் விடுதலை தினம்(1943)
- சிலியின் ஜூவான் பெர்னாண்டஸ் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன(1574)
- அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது(1908)
- அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் எஃப்.கென்னடி, லீ ஹார்வி ஒஸ்வால்ட் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்(1963)
- தென்னகம்.காம் செய்தி குழு