தமிழகம்

1.தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள் ஜூன் 3-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.


இந்தியா

1.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட
ரிசாட் – 2 பி (Risat-2B) செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ரிசாட் – 2 பி செயற்கைக்கோள் மூலமாக வேளாண் நிலப் பரப்புகள், வனம் மற்றும் பேரிடர் சூழல்களை கண்காணிக்க முடியும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

2.கிர்கிஸ்தான் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் சின்கிஜ் அய்டார்பேகோவை சந்தித்துப் பேசினார்.

3.இந்திய பல்கலைக்கழகங்களில் கடந்த 10 ஆண்டுகளாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி (பிஎச்.டி.) கட்டுரைகளின் தரம் குறித்து ஆய்வு நடத்த பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) முடிவு செய்துள்ளது.


வர்த்தகம்

1.நாட்டின் அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்களில் அரசின் இந்தியன் ஆயில் காப்பரேஷனை பின்னுக்குத் தள்ளி, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.


உலகம்

1.இந்தோனேஷியாவில் கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ வெற்றி பெற்றதாக  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

2.50 வயதான நேபாளத்தை சேர்ந்த மலையேறும் வீரர் காமி ரீதா ஷேர்பா, உலகின் அதிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 24ஆவது முறையாக ஏறி, தனது சொந்த சாதனையை அவரே முறியடித்தார்.


விளையாட்டு

1.ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து  ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வி அடைந்தார்.

2.ஃபார்முலா ஒன் முன்னாள் சாம்பியன் நிகி லாடா (70) கடந்த திங்கள்கிழமை காலமானார்.
ஆஸ்திரியாவைச் சேர்ந்த இவர், 1975, 1977, 1984 ஆகிய ஆண்டுகளில் ஃபார்முலா ஒன் உலக சாம்பியனாகி சாதனை புரிந்தார்.


ன்றைய தினம்

  • சர்வதேச பல்லுயிர் பரவல் தினம்
  • இலங்கை குடியரசு தினம்(1972)
  • ஏமன் தேசிய தினம்
  • விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது(1990)
  • ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தை பெற்றனர்(1906)
  • முதல் அட்லஸ் 70 வரைபடங்களுடன் வெளியிடப்பட்டது(1570)

– தென்னகம்.காம் செய்தி குழு