Current Affairs – 22 May 2018
தமிழகம்
1.சென்னையில் சாலை போக்குவரத்தை மேம்படுத்தும் விதமாக பயனற்ற பழைய நிழற்குடைகளை இடித்து அகற்ற மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்தியா
1.அதிநவீன ஆற்றல் வாய்ந்த பிரமோஸ் ஏவுகணை ஒடிஸா மாநிலம், பலாசோரில் திங்கள்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
வர்த்தகம்
1.பூஷன் ஸ்டீல் நிறுவனம் கைமாறியதால், பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் சுமையில், 35 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது.
உலகம்
1.நிலவின் இருண்ட பகுதிகளைக் குறித்து ஆய்வு செய்வதற்கான கியீகியாவோ செயற்கைக்கோளை சீனா திங்கள்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
2.வெனிசூலாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில், தற்போதைய அதிபர் நிக்கோலஸ் மடூரோ மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
1.இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஃபேல் நடால் 8-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
2.தாய்லாந்து ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி இரட்டையர் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.
3.உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்திய மகளிர் அணி 4-1 என்ற ஆட்டக்கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இன்றைய தினம்
- சர்வதேச பல்லுயிர் பரவல் தினம்
- இலங்கை குடியரசு தினம்(1972)
- ஏமன் தேசிய தினம்
- விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது(1990)
- ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தை பெற்றனர்(1906)
- முதல் அட்லஸ் 70 வரைபடங்களுடன் வெளியிடப்பட்டது(1570)
–தென்னகம்.காம் செய்தி குழு