தமிழகம்

1.தமிழகத்தில் நிகழாண்டில் 21,965 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்தியா

1.மிஸோரம் மாநிலத்தில் மீண்டும் பூரண மதுவிலக்கைக் கொண்டு வருவதற்கான மசோதா, அந்த மாநில சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


வர்த்தகம்

1.கடந்த ஜனவரியில்,  தொலை தொடர்பு சேவை நிறுவனங்களின் சந்தாதாரர் எண்ணிக்கை, மூன்றாவது முறையாக, 120 கோடியை தாண்டியது.

2.அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சென்னை அலுவலக கட்டடத்துக்கு அமெரிக்க கிரீன் பில்டிங் கவுன்சில் வழங்கும் பசுமை விருது கிடைத்துள்ளது.


உலகம்

1.மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் பட்டியலில் இந்த ஆண்டில் இந்தியா 7 இடங்கள் பின்தங்கியுள்ளது. சர்வதேச அளவில் ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதை மதிப்பீடு செய்து ஐ.நா. சார்பில் ஆண்டுதோறும் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இந்தியா 140-ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தப்பட்டியலில் நமது நாடு 133-ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் 67 ஆவது இடத்தில் உள்ளது. இலங்கை 130-ஆவது இடத்திலும், வங்கதேசம் 125-ஆவது இடத்திலும், பூடான் 95-ஆவது இடத்திலும் உள்ளன.
இப்பட்டியிலில் மொத்தம் 156 நாடுகள் உள்ளன. பின்லாந்து, டென்மார்க், நார்வே ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன.

2.அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக, இந்திய அமெரிக்க பெண் நியோமி ராவ்(45) பதவியேற்றார்.

3.மசூதி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, தாக்குதல் துப்பாக்கிகள், ராணுவப் பயன்பாட்டுத் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றுக்கு நியூஸிலாந்து அரசு தடை விதித்துள்ளது.


விளையாட்டு

1.அபு தாபியில் நடைபெற்றுவந்த சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் கோடைக்கால விளையாட்டுப் போட்டியில் இந்தியா 368 பதக்கங்களை வென்று வந்துள்ளது.
இந்திய தடகள வீரர்கள் மட்டும் 154 வெள்ளி, 129 வெண்கலம் வென்றுள்ளனர்.


ன்றைய தினம்

  • உலக தண்ணீர் தினம்
  • இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் சிப்-ஐ அறிமுகம் செய்தது(1993)
  • அரபு கூட்டமைப்பு கெய்ரோவில் அமைக்கப்பட்டது(1945)
  • லூமியேர சகோதரர்கள் அசையும் திரைப்படத்தை முதன் முதலாக காண்பித்தனர்(1895)
  • ஆர்தர் ஷாவ்லொவ் மற்றும் சார்லஸ் டவுன்ஸ் ஆகியோர் லேசருக்கான முதலாவது காப்புரிமத்தை பெற்றனர்(1960)
  • சர்வதேச புவி நாள்

– தென்னகம்.காம் செய்தி குழு